தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' படத்தின், முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளதாக... டீஸருடன் அறிவித்துள்ளது படக்குழு. 

தளபதி விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் 'GOAT' திரைப்படத்தின், இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. அண்மையில் தளபதி விஜய்யின் வெறித்தனமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீதேவி முதல்... அமலா பால் வரை! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான முன்னணி தமிழ் நடிகைகள் இத்தனை பேரா?

இன்று காலை 'கோட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, நாளை மாலை 6 மணிக்கு முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் இந்த பாடலால் தளபதி ரசிகர்கள் ரெட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா - தளபதி காம்பினேஷனில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படம் உருவாகியுள்ளது. இந்த பாடலை விஜய் பாடியுள்ளது இன்னும் சிறப்பு என்றே கூறலாம்.

Goat First Single: தளபதி விஜய்யின் 'GOAT' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

இந்த படத்தில், நடிகர் பிரபுதேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, ஜெயராம், லைலா, அஜ்மல், உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதம் விநாயகர் சதூர்த்தி நாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 
The Greatest Of All Time | 1st Single Promo | Thalapathy | VP | YSR | T-Series