அல்லு அர்ஜுன் முதல் விஜய் வரை ; பணக்கார குடும்ப பெண்களை திருமணம் செய்த தென்னிந்திய நடிகர்கள்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்கள் சிலர் மிகப்பெரிய வணிகக் குடும்பப் பெண்களை மணந்துள்ளனர். 

From Allu Arjun to Vijay; South Indian actors who married women from rich families! Rya

மிகப்பெரிய வணிக பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருக்கும் சில தென்னிந்திய நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.

ராம் சரண் -  உபாசனா

தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திர ஜோடிகளில் ராம் சரண் மற்றும் உபாசனா காமினேனி கொனிடேலா தம்பதி நினைவுக்கு வரும். ராம் சரணுக்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும், அவருடைய மனைவியும் தனக்கென அடையாளத்தை உருவாக்கியுள்ளார். 2012-ல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு க்ளின் கிளாரா என்ற மகள் இருக்கிறார். 

உபாசனா காமினேனி ஒரு தொழிலதிபர் ஆவார். அவர் அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவராகவும் உள்ளார்.  அப்பல்லோ நிறுவனர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி ஆவார். அவரது தந்தை, அனில் காமினேனி, KEI குழுமத்தின் நிறுவனர் ஆவார், அவரது தாயார், ஷோபனா, அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவராகவும் உள்ளார்.

2024-ஆம் ஆண்டில் பான் இந்தியா அளவில் தோல்வியை தழுவிய திரைப்படங்கள்!

அல்லு அர்ஜுன் - சினேகா ரெட்டி

தென்னிந்தியாவின் மற்றொரு பிரபலமான ஜோடி அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி அவ்வப்போது தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். தங்கள் வாழ்க்கையின் காட்சிகளை தங்கள் ரசிகர்களுக்காக அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்கள்.2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

டோலிவுட்டின் மெகா குடும்பத்தைக் சேர்ந்த அல்லு அர்ஜுன் செல்வாக்கான குடும்ப பின்னணியை கொண்டுள்ளார். அதே போல் அவரின் மனைவி சினேகாவும் சமமான செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தெலுங்கானாவில் உள்ள புகழ்பெற்ற சயின்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் தலைவரும் கல்வியாளருமான கஞ்சர்லா சந்திரசேகர் ரெட்டியின் மகள் ஆவார். இந்த ஜோடி சுமார் ரூ. 90-100 கோடி செலவில் பிரம்மாண்ட திருமணம் செய்து கொண்டனர்.

ஜூனியர் என்டிஆர் - லக்ஷ்மி பிரணதி

ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது மனைவி லக்ஷ்மி பிரணதி தம்பதி தெலுங்கு சினிமாவின் பிரபலமான ஜோடி ஆகும். எனினும் இந்த ஜோடி ஊடக வெளிச்சத்திலிருந்து விலக்கி வைக்க விரும்புகிறார்கள். தனது கணவரின் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கூட லக்ஷ்மி பிரணதி அரிதாகவே கலந்து கொள்வார். 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர். ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகன் என்றாலும், மறுபுறம், அவரின் மனைவி லக்ஷ்மி பிரபல தொழிலதிபர் நர்னே ஸ்ரீனிவாஸ் ராவின் மகள். இவரது தாயார் பிரபல அரசியல்வாதி சந்திரபாபு நாயுடுவின் மருமகள் ஆவார். லக்ஷ்மி பிரணதியின் குடும்பம் ஆந்திராவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் - அமல் சஃபியா

தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாகத் திகழும் துல்கர் சல்மான் 2011-ம் ஆண்டு அமல் சுஃபியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

துல்கரின் மனைவி அமல் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இல்லை. அவர் ஒரு தொழிலதிபராகவும் இண்டீரியர் டிசைனராகவும் இருக்கிறார். அமல் சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சையத் நிஜாமுதீனின் மகள்.

ராணா டக்குபதி - மிஹீகா பஜாஜ்

ராணா டகுபதி மற்றும் மிஹீகா பஜாஜ் ஆகியோர் டோலிவுட்டின் மிகவும் விரும்பப்படும் ஜோடிகளில் ஒன்று. இந்த ஜோடி 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மிஹீகாவைப் பொறுத்தவரை, அவர் செல்வாக்கு மிக்க வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மிகவும் பிரலமான ஆடை நகை பிராண்டான க்ர்சலா ஜூவல்ஸின் உரிமையாளரின் மகள் தான் மஹீகா..  தற்போது ஒரு தொழிலதிபராகவும், டியூ டிராப் டிசைனர் ஸ்டுடியோவின் நிறுவனராகவும் மஹீகா இருக்கிறார்..

மருமகள் சோபிதா பற்றி நாகார்ஜூனா கூறிய கருத்து; என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் - சங்கீதா சொர்ணலிங்கம்

நடிகரும், அரசியல் தலைவருமான நடிகர் விஜய் பல ஆண்டுகளாக தனது படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.. சங்கீதாவும் ஒரு வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் இலங்கை தொழில் அதிபர் ஒருவரின் மகள் மற்றும் இங்கிலாந்தில் வளர்ந்தவர். சங்கீதா இப்போது தொழிலதிபராகவும் இருக்கிறார்.. 1999-ம் ஆண்டு திருமணம் செய்த இந்த ஜோடிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios