MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மருமகள் சோபிதா பற்றி நாகார்ஜூனா கூறிய கருத்து; என்ன சொன்னார் தெரியுமா?

மருமகள் சோபிதா பற்றி நாகார்ஜூனா கூறிய கருத்து; என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் நாகார்ஜுனா தனது மருமகள் சோபிதா துலிபாலாவைப் பற்றிய தன்னுடைய கருத்துக்களை சமீபத்தில் கூறிய நிலையில் அவை வைரலாகி வருகின்றன.  

2 Min read
Author : manimegalai a
| Updated : Dec 27 2024, 04:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Naga Cahitanya and Samantha Divorce

Naga Cahitanya and Samantha Divorce

பல்லாவரத்து பேரழகியான நடிகை சமந்தாவை உருகி உருகி காதலித்து, திருமணம் செய்து கொண்ட நடிகர் நாக சைதன்யா, 4 வருடத்தில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். சமந்தாவை விவாகரத்து செய்த ஒரு வருடத்திலேயே தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நாக சைதன்யா, பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்க துவங்கினார். 
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Nagarjuna Dating with Sobitha

Nagarjuna Dating with Sobitha

இரண்டு வருடங்களுக்கும் மேலாக இவர்கள் இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வந்தனர். சோபிதா-நாக சைதன்யா இருவரும் வெளிநாட்டிற்கு ஜோடியாக சென்றபோது எடுத்து கொண்ட புகைப்படங்களும் வைரலானது.

ஆனால் தொடர்ந்து தங்களின் காதல் வதந்திகளை மறுத்து வந்த நாக சைதன்யா, சோபிதா ஆகஸ்ட் 8 ஆம் தேதி, குடும்பத்தினர் சம்மதத்துடன் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். நாகார்ஜுனாவின் ஹைதராபாத் இல்லத்தில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்தன. நாகார்ஜுனாவும் எக்ஸ் தள பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்து மருமகள் சோபிதாவை வரவேற்றார்.

புது வரவுகளால் TRP-யில் அதள பாதாளத்துக்கு போன விஜய் டிவி; டாப் 5 லிஸ்டில் கூட இடம்பிடிக்காத சோகம்!

37
Naga Chaitanya and Sobitha Wedding

Naga Chaitanya and Sobitha Wedding

இதை தொடர்ந்து டிசம்பர் 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நாக சைதன்யா-சோபிதா திருமணம்  எளிமையாக நடந்தது. 300 பேர் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டனர். நாக சைதன்யா - சோபிதா விருப்பப்படி திருமணம் எளிமையாக நடந்ததாக நாகார்ஜுனா விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், நாகார்ஜுனா தனது புதிய மருமகள் சோபிதாவைப் பகிர்ந்து கொண்ட கருத்து வைரலாகி வருகிறது.
 

47
Nagarjuna Opinion

Nagarjuna Opinion

நாக சைதன்யாவை சோபிதா காதலிக்க துவங்குவதற்கு முன்பே சோபிதாவுடன் நாகார்ஜுனாவுக்கு பழக்கம் இருந்ததாம். மேலும் சோபிதா துலிபாலா கடுமையாக உழைத்து தான் இந்த நிலையை அடைந்துள்ளார். வேலையில் அவர் எப்போதும் தரத்துக்கு தான் முன்னுரிமை கொடுப்பார். எப்போதும் அமைதியாக இருப்பார். நாக சைதன்யாவின் மனைவியாக சோபிதா வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று நாகார்ஜுனா கூறினார். புதிய மருமகளின் ஆளுமை, மற்றும் கடின உழைப்பை நாகார்ஜுனா பாராட்டினார். 

அட்லீ தயாரிப்பில் வெளியான பேபி ஜான்; முதற்கட்ட வசூல் எத்தனை கோடி தெரியுமா?
 

57
Nagarjuna Hearty Welcome Daughter in law Sobitha

Nagarjuna Hearty Welcome Daughter in law Sobitha

சோபிதாவை நாகார்ஜுனா விரும்புகிறார், என்பது தெரிந்த பின்னர் மனப்பூர்வமாக சோபிதா துலிபாலாவை நாகர்ஜுனா மருமகளாக ஏற்றுக்கொண்டார் என்பது அவரது கருத்துக்கள் மூலம் தெரிகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் சோபிதா ஒரு தெலுங்குப் பெண் ஆவார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள தெனாலியில் பிறந்த சோபிதா விசாகப்பட்டினத்தில் படித்தார். மும்பை சென்று மாடலிங் செய்தார். பல விளம்பரங்களில் நடித்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

67
Sobitha Dhulipala Quit Cinema

Sobitha Dhulipala Quit Cinema

தெலுங்கில் 'குடாச்சாரி', 'மேஜர்' படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான சோபிதா, தற்போது படப்பிடிப்பில் உள்ள 'குடாச்சாரி 2' படத்திலும் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அதே நேரம் பலர் சோபிதா திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு விலக வாய்ப்புள்ளதாகவும் கூறி வருகிறார்கள். ஆனால் இது குறித்து சோபிதா தரப்பில் இருந்து அதிகார பூர்வமாக அறிவிப்புகள் வெளியாகவில்லை.

லிவிங் டூ கெதர் ஓகே பட் கல்யாணம் வேண்டாம்! அப்பா கமல்ஹாசனையே மிஞ்சிவிட்டாரா மகள் ஸ்ருதி!
 

77
Naga Chaitanya upcoming Movie

Naga Chaitanya upcoming Movie

நாக சைதன்யா  'தண்டேல்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குனர் சந்து மொண்டேட்டி ஒரு உணர்ச்சிமிக்க காதல் படமாக இதை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை அல்லு அர்ஜுன் தயாரிக்க,  தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நாகார்ஜுனா
நாக சைதன்யா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved