லிவிங் டூ கெதர் ஓகே பட் கல்யாணம் வேண்டாம்! அப்பா கமல்ஹாசனையே மிஞ்சிவிட்டாரா மகள் ஸ்ருதி!
நடிகை ஸ்ருதி ஹாசன் அடிக்கடி காதலரை பிரேக் அப் செய்து வரும் நிலையில், இப்போது முதல் முறையாக திருமணம் குறித்து எழுபட்ட கேள்விக்கு யாரும் எதிர்பாராத விதமாக பதிலளித்துள்ளார்.

Kamalhaasan Daughter Shruti Haasan
'அப்பா 8 அடி பாய்ந்தால் பிள்ளை 16 பாயும்' என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் நடிகை ஸ்ருதி ஹாசன். காதல் வாழ்க்கையில் மட்டும் அல்ல, நடிப்பு, ஆட்டம், பட்டம் என ஸ்ருதி மிகவும் தனித்து தெரியும் பிரபலமாகவே உள்ளார். தன்னுடைய தந்தை நடிப்பில் வெளியான 'தேவர் மகன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ருதி ஹாசன், 'போற்றிப்பாடடி பெண்ணே' என்கிற பாடலையும் தன்னுடைய மழலை குரலால் பாடி ரசிகர்களை மெய்மறக்க செய்தார்.
Shruti haasan Debut In Hindi Film
இதை தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி - தயாரித்து நடித்த 'ஹே ராம்' படத்திலும் வல்லபாய் படேலின் மகளாக நடித்திருந்தார். பின்னர் அதிரடியாக பாலிவுட் பக்கம் சாய்ந்த ஸ்ருதிஹாசன், 'லக்' என்கிற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் பெரிதாக வெற்றியடையாத நிலையில்... அதிரடியாக தெலுங்கு, தமிழ் போன்ற தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க துவங்கினார். அந்த வகையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2011-ஆம் ஆண்டு வெளியான '7-ஆம் அறிவு ' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.
அருணை கதறவிட்டு சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ்! பட் ஏமாற்றம் என்னவோ ரசிகர்களுக்கு தான்!
Top Heroes Movies
தமிழை விட, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, தமிழில், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களை டார்கெட் செய்து நடித்து வந்தார். குறிப்பாக தனுஷ், விஜய், அஜித், விஜய் சேதுபதி, போன்ற நடிகர்களின் படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றி பெற்றன.
Shruti Haasan Upcoming Movies
கடைசியாக தெலுங்கில் பிரபாஸுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்த 'சலார்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது. தற்போது இவரின் கைவசம் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி மற்றும் சலார் 2 ஆகிய படங்கள் உள்ளன. காதல் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை ஸ்ருதி ஹாசன், பொதுவாக திருமணம் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் தற்போது இவர், அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய மனதில் பட்டத்தை பளீச் என கூறியுள்ளார்.
Need Relation Ship Not Marriage
அதாவது எனக்கு ஒருவருடன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பது மிகவும் பிடிக்கும். காதலிப்பது மிகவும் பிடிக்கும். யாருடனாவது என்னை இணைத்துக்கொள்ள நான் விரும்பினாலும், இதுவரை எனக்கு மிகவும் ஸ்பெஷலான நபர் என்று யாரையும் கூற முடியாது. அப்படிப்பட்ட நபரை இதுவரை நான் பார்க்கவில்லை. இது என்னுடைய சொந்த சித்தனை மட்டும் தான். திருமணத்தை பற்றி நான் இதுவரை யோசித்தது இல்லை. அதில் எனக்கு இதுவரை ஆர்வமும் இல்லை என கூறியுள்ளார். இப்போது திருமணத்தை பற்றி யோசிக்கவில்லை என்றாலும், வருங்காலத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என ஸ்ருதி கூறியுள்ளதால், இவர் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளது இதன் மூலம் தெரிகிறது.
Shruti Haasan View For Love and Marriage
நடிகை ஸ்ருதி ஹாசன் ஏற்கனவே, பல காதல் தோல்விகளை சந்தித்துள்ளார். குறிப்பாக தெலுங்கில் நடிகர் சித்தார்த்துடன் நடித்த போதும் சித்தார்த் - ஸ்ருதி காதலிப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து, 3 படத்தின் போது தனுஷ் - ஸ்ருதி இருவரும் டேட்டிங் செய்வதாக கிசுகிசு எழுந்தது. பின்னர் லண்டனை சேர்ந்த Michael Corsale என்பவரை காதலித்து, பின்னர் அவரிடம் இருந்து பிரிந்தார். இவரை தொடர்ந்து, டூன் டூன் கலைஞர் சாந்தனு ஹசாரிக்கா என்பவரை காதலித்து இந்த ஆண்டு அவரிடம் இருந்து பிரேக் அப் செய்து பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தை சந்தித்த உலக செஸ் சாம்பியன் குகேஷ்! தலைவர் கொடுத்த பரிசு; என்ன தெரியுமா?
Tamil cinema Actress
இதை வைத்து தான் அப்பா எப்படி, தன்னுடைய வாழ்க்கையில் பல காதல் சர்ச்சைகளை சந்தித்துள்ளாரோ அதே போல் மகளும், காதல் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.