MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 2024-ஆம் ஆண்டில் பான் இந்தியா அளவில் தோல்வியை தழுவிய திரைப்படங்கள்!

2024-ஆம் ஆண்டில் பான் இந்தியா அளவில் தோல்வியை தழுவிய திரைப்படங்கள்!

இந்த ஆண்டு pan-India படங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும், பான் இந்தியா தரத்தில் பிக் பட்ஜட்டில் வெளியான பல படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. அப்படி தோல்வியை கண்ட படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 27 2024, 08:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
2024 Failure Pan India movies

2024 Failure Pan India movies

ஒரே ஒரு மொழியில் எடுக்கப்படும் படங்களை விட, பான் - இந்தியா அளவில் படம் இயக்குவது மிகவும் சவால் நிறைந்த ஒன்று என கூறலாம். ஒரு மொழியில் படம் எடுக்கும் போது, அது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, என அந்தந்த மொழியை சேர்ந்த ரசிகர்களுக்கு மட்டுமே பிடித்த படமாக இருக்கும். ஆனால் பான் இந்தியா படம் என்பது ஒருத்தரப்பை மட்டுமே சாராமல் அணைத்து தரப்பு ரசிகர்களையும்.. அணைத்து மொழி ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாக வேண்டும்.

அதே போல் பான் -இந்தியா மொழி நடிகர்கள், தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பிரபலமான ஒருவராக இருக்க வேண்டும். பிரபலமாகாத ஒரு நடிகர் மற்ற மொழி ரசிகர்களால் ரசிக்கப்பட்டால் அது அதிஷ்டத்தை வசமே. இந்த ஆண்டு பான் - இந்தியா திரைப்படமாக வெளியாகி தோல்வியை தழுவிய திரைப்படங்களை பார்ப்போம்.
 

25
Indian 2 Movie

Indian 2 Movie

இந்த ஆண்டு வெளியான pan-India தோல்வி படங்களில் ஒரு, கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன் 2. இந்தியன் படத்தின் முதல் பாக வெற்றிக்கு பின்னர் வெளியான இரண்டாம் பாகம் ஏனோ அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர தவறி விட்டது. இவ்வளவு ஏன், தமிழிலேயே இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குருபூஜை! தளபதி விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த விஜய பிரபாகரன்!

35
GOAT Movie

GOAT Movie

தளபதி விஜய் தளபதியின் நிலையும் இதேதான். ஒருபுறம் அரசியல், மறுபுறம் சினிமா என பிஸியாக இருக்கும் விஜய், இந்த ஆண்டு தி GOAT படத்தில் நடித்திருந்தார். சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், வசூல் ரீதியாக படுதோல்வியை சந்திக்கவில்லை என்றாலும், பான் - இந்தியா அளவில் இந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் தோல்வியை சந்தித்தது.

45
Kanguva

Kanguva

pan-India அளவில் வெளியாகி 2000 கோடி வசூல் செய்யும் என மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, 150 கோடி வசூல் மட்டுமே ஈட்டி, டிசாஸ்டர் தோல்வியை சந்தித்த திரைப்படம் தான் இயக்குனர் சிறுத்தை சிவா - சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா'. பான் இந்தியா அளவில் வெளியாகி, ரசிகர்களை இந்த படம் ஏமாற்றத்தில் தள்ளியது.

மருமகள் சோபிதா பற்றி நாகார்ஜூனா கூறிய கருத்து; என்ன சொன்னார் தெரியுமா?

55
Thangalaan

Thangalaan

அதே போல் பான் - இந்தியா தரத்தில், ரியல் KGF  என்கிற எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் விக்ரம் நடித்த தங்கலான். நடிகர் விக்ரம் ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறி, இந்த படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இப்படம், தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவியது. காட்சிகள் மற்றும் நடிகர்களை உழைப்பு நேர்த்தியாக இருந்த அளவுக்கு கதை இல்லாமல் போனதே இந்த படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் 2 கல்யாணம்! ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் 'மெகா' திருமண ஏற்பாடுகள் - முழு விவரம்
Recommended image2
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image3
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved