முதலில் ஆபாச படங்கள் எடுப்பதை நிறுத்துங்கள் என பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே ஆதங்கம் தெரிவித்துள்ளார் .  தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரபல ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே ,  பாலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து வருகிறார் அப்தே,  அத்துடன்  மிதமிஞ்சிய கிளாமராலும் ஆப்தேவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு என்று செல்லலாம்.

 

இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த ராதிகா ஆப்தே ,  தாங்கள் ஒப்ந்தமாகும் கதாபாத்திரங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார் ,  திரைப்படம் மட்டுமின்றி  யூடியுப் படம் மற்றும் குறும் படங்களிலும் வித்தியாசமான ரோல்களில்  ஆப்தே திறமையை காட்டியுள்ளார்.   தான் நடித்த குறும்படத்தில் பெண்களின் காமத்தை பேசுவதாக கதாபாத்திரங்கள் அமைந்திருந்தது . பத்லாபூர் படத்தில் ஆபாச வசனம் பேசியது மட்டுமல்லாமல் கிளாமராக நடித்திருப்பார் அத்துடன்,  யூடியூபில் அவர் நடித்த சில படக்காட்சிகள்  எடிட் செய்து வெளியிட்டுள்ளனர் .  இந்நிலையில்  பத்லாபூர்  படத்தில் நடித்தது  போன்றே வாய்ப்புகள் வருவது சலிப்புட்டுவதாக உள்ளது என்றார்.

 

அதுமட்டுமல்லாமல் நானும் அதுபோன்ற ஆபாச கதாபாத்திரங்களை விரும்பி ஏற்று  நடிக்கிறேன் என பலர் நினைக்கின்றனர் .  அது  தனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார் . எனவே இது போன்ற ஆபாசப் படங்களை எடுப்பதை முதலில் நிறுத்துங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.