அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் அலிபாபா, கற்றது களவு, கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் கிருஷ்ணா. இந்நிலையில் இவரது மேலாளர் திலீப் குமார் என்பவர் கிருஷ்ணா தன்னிடம் ரூபாய்.10 லட்சம் பண மோசடி செய்துவிட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். 

மேலும் செய்திகள்: அவளுக்கு ஒர்க் அவுட் ஆச்சி எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது... ஜாமின் மனு தள்ளுபடியால் சிறையில் புலம்பும் நடிகை!
 

நடிகர் கிருஷ்ணா தற்போது, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் திலீப் குமார் என்பவர் சமீப காலமாகவே மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். திலீப் குமாரிடம் இருந்து, கிருஷ்ணா சுமார் 10 லட்சம் வரை, கடனாக வாங்கியுள்ளார். பணம் பெற்று பல நாட்கள் ஆகியும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

தன்னிடம் வாங்கிய பணத்தை திலீப் குமார் தொடர்ந்து கேட்ட போதிலும் பணம் திரும்ப கிடைக்காததால்,  கிருஷ்ணா மீது அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

 

மேலும் செய்திகள்: கேப்டன்சி டாஸ்க்கில் பாலாஜி செய்த சிறிய தவறு..! ரம்யாவிற்கு விட்டுக்கொடுக்க போகிறாரா..?
 

மேலும் செய்திகள்: சித்ரா தற்கொலை... இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
 

அந்த புகார் மனுவில், நடிகர் கிருஷ்ணா தனது சொந்த தேவைக்காக  ரூ.10 லட்சம் ரூபாய் தன்னிடம் இருந்து கடன் பெற்றதாகவும்.  அந்த கடனை பலமுறை கேட்டும் திருப்பித்தராமல் என்னை ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, என்னிடம் மோசடி செய்த ரூபாய் 10 லட்சம் பணத்தை பெற்று தரவேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.