அவளுக்கு ஒர்க் அவுட் ஆச்சி எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது... ஜாமின் மனு தள்ளுபடியால் சிறையில் புலம்பும் நடிகை!
First Published Dec 11, 2020, 4:25 PM IST
பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது.

அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை மருந்தை விற்பனை செய்ததற்காக, இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?