கேப்டன்சி டாஸ்க்கில் பாலாஜி செய்த சிறிய தவறு..! ரம்யாவிற்கு விட்டுக்கொடுக்க போகிறாரா..?
First Published Dec 11, 2020, 3:18 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் மிகவும் மோசமாக விளையாடியதாக தேர்வு செய்யப்பட்ட இந்த வார கேப்டன் அனிதா ஜெயிலுக்கு சென்றுள்ள நிலையில், இந்த வாரம் முழுவதும் சிறப்பாக விளையாடியதாக தேர்வு செய்யப்பட்ட , ரம்யா,பாலாஜி, மற்றும் நிஷா ஆகியோருக்கு இடையே பிக்பாஸ் நடத்தும் சுவாரஸ்யமான போட்டி தான் தற்போதைய புரோமோவில் வெளியாகியுள்ளது.

கேப்டன்சி டாஸ்க்கில் ரம்யா, பாலாஜி, நிஷா ஆகியோருக்கு பசலில் உள்ள தங்களது முகத்தை சரியாக பொருத்தவேண்டும் என்றும், முதலில் யார் இந்த டாஸ்க்கை முடிகிறாரோ அவர் தான் இந்த வாரத்தின் கேப்டன் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இதில் மிகவும் வேகமாக செயல் பட்டு, பாலாஜி முதலில் பொருத்தி வெற்றி பெறுகிறார். அவருக்கு அனைவரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள்.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?