மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் யானை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அப்படத்தின் தணிக்கை  சான்றிதழை ரத்து செய்ய கோரிய  வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. 

மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் யானை திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அப்படத்தின் தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்டு 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இது நடிகர் அருண்விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.. இளம் வயது முதலே பல படங்களில் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் வெற்றி பெறாததால் தன் தந்தையைப் போல சினிமா துறையில் பெரிய அளவில் அருண்விஜய் ஜொலிக்க முடியவில்லை, ஆனால் சமீபகாலமாக அவர் நடித்து வரும் ஒவ்வொரு படங்களும் சூப்பர் ஹிட் ஆக்கி வருகிறது, இந்நிலையில் அருண் விஜய் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இதற்கு அவரது அசாதாரண உழைப்பும், தளராத நம்பிக்கையுமே காரணம் என்று அவரது ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தில் சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், யானைத் இத்திரைப்படத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம்- பாம்பன் பகுதி மீனவர்கள் ஏதோ சமூக விரோதிகளை போல அப்படத்தில் சித்தரித்துள்ளதாகவும் மீனவர்களை கூலிப்படையினராகவும், குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரித்து உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:  கார்த்தி வெளியிட்ட ...சீதா ராமம் ட்ரைலர்..நாயகியை தேடும் ராஷ்மிகா..துல்கர் சல்மான்..

அதேபோல படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், கச்சத்தீவு பிரச்சினை இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், ஆனால் அவர்கள் அதை அணுகியுள்ள விதம் தங்களது உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்: என் தந்தை மரணத்தில் இருந்து தொடங்கிய பயணம் தான் ‘சூரரைப் போற்று’ - சுதா கொங்கரா வெளியிட்ட உருக்கமான அறிக்கை

கடலையே நம்பி, கடலையே வாழ்வாதாரமாகக் கொண்டு, உயிரை பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் தங்களை, சமுதாயத்தில் விளிம்பு நிலை மக்களான மீனவர்களை அவமதிக்கும் வகையில் படத்தில் கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

எனவே அக்காட்சிகளை நீக்க வேண்டும், அப்படத்தைத் தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் என்பதுடன், படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழ் ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதிகள் விஸ்வநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காணொளி காட்சி மூலம் ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டது, எனவே இந்த வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.