கார்த்தி வெளியிட்ட ...சீதா ராமம் ட்ரைலர்..நாயகியை தேடும் ராஷ்மிகா..துல்கர் சல்மான்..
துல்கர் சல்மான், ரஷ்மிகாவின் சீதா ராமம் படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி தனது வலைதள பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். அத்துடன் படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் நடிகர்.
பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி என்பவர் இயக்கியுள்ள சீதா ராமம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. காதல் கதைகளுக்கு பெயர் போன இயக்குனரின் சீதாராமன் படம் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ளது. அஸ்வினி தத் மற்றும் பிரியங்கா தத் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை நடிகர் கார்த்தி தனது வலைதள பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். அத்துடன் படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார் நடிகர்.
மேலும் செய்திகளுக்கு....லண்டனிலிருந்து வர மனமில்லை..டாக்டர் நாயகி பிரியங்கா மோகனின் பதிவால் அதிர்ச்சியான ரசிகர்கள்
இந்த ட்ரெய்லரில், ராஷ்மிகாவிற்கு பழைய கடிதம் ஒன்று கிடைக்கிறது. 20 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட அந்த கடிதத்தில் சீதாவிடம் சேர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை சுமந்து கொண்டு ராஷ்மிகா ஒவ்வொரு ஊராக அலைகிறார். ஆனால் சீதாவை அவரால் கண்டறிய இயலவில்லை. இது குறித்து கதை சொல்லும் ஒருவர் நாயகன் துல்கர் சல்மான் ராணுவத்தில் இருக்கும் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் அவரது காதலி குறித்தும் விவரிக்கிறார். இந்த கடிதம் துல்கர் சல்மான் அதாவது கதையின் நாயகன் ராமால் இயற்றப்பட்டது. இறுதியில் ராஷ்மிகா சீதாவை கண்டறிந்து அவரிடம் இந்த கடிதத்தை ஒப்படைத்தாரா என்பதை இப்படத்தின் மீதி கதை என தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு...இந்தூரில் ரன்வீர் சிங்கிற்கு ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி...நிர்வாண போஸால் அடுத்தடுத்த சிக்கலில் சிக்கிய பிரபலம்.
முன்னதாக இந்த படத்தில் இருந்து ஆரோமல் என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியது. மிருணால் தாக்கூர் மற்றும் துல்கர் சல்மான் நடித்த ஒரு அழகான காதல் பாடல் அது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விநாயக் சசிகுமார் பாடல்வரிகளை சூரத் சந்தோஷ் பாடியிருந்தார். வெளியான ஒரே நாளில் பாடல் வீடியோ 3.4 மில்லியன் லைக்குகளையும் 44.368 கே பார்வையாளர்களையும் பெற்றது.
மேலும் செய்திகளுக்கு...சிம்புவுக்கு கிடைக்காத சிறப்பை அறிமுக படத்திலேயே தட்டி தூக்கிய தி லெஜண்ட்.. என்ன விஷயம் தெரியுமா?
இந்த படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா முக்கிய வேடத்தில் நடிக்க, சுமந்த், கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், சத்ரு, பூமிகா சாவ்லா, ருக்மணி விஜய் குமார், சச்சின் கெடேகர், முரளி சர்மா, வெண்ணேலா கிஷோர் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வர உள்ளது.