Sudha Kongara : நான் தேசிய விருது வென்றதை என் தந்தையால் பார்க்க முடியவில்லை என்பது தான் தனக்கு வருத்தமாக இருப்பதாக இயக்குனர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

சுதா கொங்கரா - சூர்யா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றது. இதில் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் பெறும் முதல் தேசிய விருது இதுவாகும். இதற்காக நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சுதா கொங்கரா.

அதில் அவர் கூறி இருப்பதாவது : “சூரரைப் போற்று படத்தின் பயணம் என் தந்தையின் மறைவில் இருந்து தான் தொடங்கியது. என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தபோது, வாசலில் நின்றிருந்த என்னை கடைசியாக கையசைத்து கூப்பிட்டார். அந்த நிகழ்வை தான் சூரரைப் போற்று படத்திலும் வைத்திருந்தேன். ஒரு இயக்குனராக சொல்கிறேன், நம்மில் பலர், நம் வாழ்வில் நடந்த சிலவற்றை படத்தில் காட்சியாக வைக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்கள் என நினைக்கிறேன்.

என் வாழ்வில் நடந்த பல தருணங்களை சூரரைப் போற்று படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன், அதற்கு என் தந்தைக்கு நன்றி. எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், நான் தேசிய விருது வென்றதை என் தந்தையால் பார்க்க முடியவில்லை என்பது தான். 

இதையும் படியுங்கள்... தம்பி எடுத்த அல்டிமேட் போட்டோஷூட்... ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு செம்ம மாஸாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்

என் குரு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு மணி சார் தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் வெறும் ஜீரோ தான். வாழ்க்கையை படமாக்க அனுமதித்த கோபிநாத் சாருக்கும், கோபிநாத்தாக வாழ்ந்த சூர்யாவுக்கு மிக்க நன்றி. என் குடும்பத்துக்கு மிகப்பெரிய நன்றி.

அதேபோல் எனது நண்பர்கள் ஜிவி பிரகாஷ், பூர்ணிமா, விஜய் ஷங்கர் ஆகியோருக்கு நன்றி. என்னை எப்போதும் நம்பினார்கள். இந்த பயணத்தில் என்னை இவர்கள் சரியவிட்டதில்லை. நீங்கள் தான் என் அரணாக இருந்தீர்கள். என்னுடைய உதவி இயக்குனர்களுக்கு நன்றி, ஒவ்வொரு முறையும் எனது பயணத்தை சாத்தியமாக்கும் விசுவாசமான போர்வீரர்கள் போல் என்னுடன் இருந்ததற்கு நன்றி.

இப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவிற்கும், இப்படத்தை அங்கீகரித்த ரசிகர்களுக்கும் நன்றி. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தான் இப்படத்தை நான் தியேட்டரில் பார்த்தேன். அப்போது நீங்கள் கொடுத்த வரவேற்பும், நீங்கள் அடித்த விசில்களும் எனக்கு ஊந்துகோளாக இருந்தது. நீங்கள் தான் என் கடவுள். இறுதியாக தன்னைப்போன்ற பெண் இயக்குனர்களுக்கு ஊக்கம் கொடுத்து தன் அறிக்கையை முடித்துள்ளார் சுதா கொங்கரா.

இதையும் படியுங்கள்... நயனின் திருமண வீடியோவிற்காக தீயாய் வேலை செய்யும் கவுதம் மேனன் - எப்போ... எப்படி ரிலீஸாகப் போகுது தெரியுமா?