- Home
- Cinema
- நயனின் திருமண வீடியோவிற்காக தீயாய் வேலை செய்யும் கவுதம் மேனன் - எப்போ... எப்படி ரிலீஸாகப் போகுது தெரியுமா?
நயனின் திருமண வீடியோவிற்காக தீயாய் வேலை செய்யும் கவுதம் மேனன் - எப்போ... எப்படி ரிலீஸாகப் போகுது தெரியுமா?
Nayanthara Marriage video : விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 50 நாட்கள் ஆகும் நிலையில், அவர்களின் திருமண வீடியோ இதுவரை வெளியிடப்படவில்லை.

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா, இவர் தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் கரம்பிடித்தார். இவர்களது திருமணம் பல்வேறு கட்டுப்பாடுகள் உடனும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு வந்திருந்த பிரபலங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
ஏனெனில் இவர்களது திருமண நிகழ்வை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது. மேலும் நயன் - விக்கியின் திருமண செலவையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் செய்ததாக கூறப்பட்டது. இவர்களுக்கு திருமணமாகி 50 நாட்கள் ஆகவுள்ளது. இருப்பினும் இதுவரை திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடாமல் உள்ளது.
அண்மையில், விக்னேஷ் சிவன் தனது திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது திருமண வீடியோவை வெளியிடாத கோபத்தில் அவர் அவ்வாறு செய்ததாக கூறப்பட்டது. இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனமும் நயன்தாராவின் திருமண வீடியோவை வெளியிடும் முடிவில் இருந்து பின்வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையும் படியுங்கள்...அடுத்தடுத்து மண்ணை கவ்வும் பாலிவுட் படங்கள்..தொடர் தோல்வியால் துவண்டுள்ள சூப்பர் ஹீரோஸ்!
ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் விக்கி நயன் ஜோடியின் போடோஷூட் ஒன்றை வெளியிட்டு வதந்திகளை தவிடுபொடி ஆக்கியது. சமீபத்திய தகவல்படி அந்நிறுவனம் விக்கி - நயன் ஜோடியின் திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளதாம், இதற்கான வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம்.
குறிப்பாக இந்த திருமண வீடியோவை ஒரே தொகுப்பாக வெளியிடாமல், வெப் சீரிஸ் போல், மெஹந்தி நிகழ்வு தனியாகவும், சங்கீத் நிகழ்வு தனியாகவும், திருமண நிகழ்வு தனியாகவும், திருமணத்துக்கு பிந்தைய நிகழ்வு தனியாகவும் என தனித்தனியாக வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கான பணிகளை கவனிக்கும் பொறுப்பு இயக்குனர் கவுதம் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாம். இதன்மூலம் விக்கி - நயனின் திருமண வீடியோ வெகு விரைவில் ரிலீசாகும் எனத் தெரிகிறது.
இதையும் படியுங்கள்...திரிஷாவுக்கு பதிலாக பொன்னியின் செல்வனில் குந்தவையாக களமிறக்கப்பட்ட அசின்? இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு..!