அடுத்தடுத்து மண்ணை கவ்வும் பாலிவுட் படங்கள்..தொடர் தோல்வியால் துவண்டுள்ள சூப்பர் ஹீரோஸ்!
மிகவும் விலை உயர்ந்த இந்தி படங்களில் ஷம்ஷேரா ஒன்றாக கருதப்பட்ட நிலையில் தற்போது வரவேற்பு பெறாதது படக்குழுவை ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து பாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் மண்ணை கவ்வுவது இந்தி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் படங்களுக்கு கிடைத்த வெற்றிகள் தென்னிந்திய சினிமா நாயகர்களுக்கு எட்டா கனியாக இருந்த காலம் போய் தற்போது பான் இந்திய அளவில் தென்னிந்திய சினிமாக்கள் மாஸ் காட்டி வருகிறது. அந்த வரிசையில் ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆர் ஆர் ஆர் படம் ரூ.1200 கோடிகளை வசூல் செய்து அல்டிமேட் காட்டியது. ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மேலும் செய்திகளுக்கு...அஜித்தா இவர்? உடல் எடை கூடி வயதான தோற்றத்தில் அல்டிமேட் ஸ்டார்! வீடு திரும்பும் வைரல் வீடியோ இதோ !
தெலுங்கில் உருவான இந்தப் படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற ஆர் ஆர் ஆர் -ல் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் அதிரடி காட்டி இருந்தனர்.
இதையடுத்து கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியான கேஜிஎப் அத்தியாயம் 2 உலக அளவில் நல்ல வசூலை பெற்றது. ரூ.1250 கோடிகளை நுழைவுச்சீட்டு வாயிலாக பெற்ற கேஜிஎப் படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். யாஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
VIKRAM
மாற்றமொழி படங்களை விட நாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்தது விக்ரம். உலக நாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூபாய் 442 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்தது. இந்தப் படமும் பான் இந்திய படமாக வெளியாகி இருந்தது. விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யாவின் காமியோ என கலக்கியது லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம்.
மேலும் செய்திகளுக்கு... தம்பி எடுத்த அல்டிமேட் போட்டோஷூட்... ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு செம்ம மாஸாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்
Dhaakad
இந்நிலைகள் பிரம்மாண்டமாக சித்தரிக்கப்பட்ட பாலிவுட் படங்கள் சமீபகாலமாக தோல்விகளை சந்தித்து வருவது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. கடந்த மே மாதம் 20ஆம் தேதி வெளியான "Dhaakad" படம் 85 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் ரூ.3.77 கோடி ரூபாயை மட்டுமே வசூலாக பெற்றது.
மேலும் செய்திகளுக்கு... வலிமை பட நாயகி ஹூமா குரேஷியின் ஓவர் ஹாட் போட்டோஸ்
கங்கனா ரணாவத் முக்கி வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தை ரஸ்னீஷ் காய் என்பவர் இயக்கி இருந்தார். அடிக்கடி அரசியல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் கங்கனார் ராணவத்தின் இந்த படம் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது..
Samrat Prithviraj )
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியான சாம்ராட் பிருத்விராஜ் (Samrat Prithviraj ) தோல்வியை சந்தித்தது. அக்ஷய் குமார் நாயகனாக நடித்திருந்த இந்த படம் ரூ.300 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் வெறும் ரூ. 90.32 கோடி மட்டுமே வசூலாக பெற்றது. ஹிந்தியை மூல மொழியாக கொண்டு வரலாற்று அதிரடி திரைப்படமாக தயாரான இந்த படம் ராஜபுத்திர மன்னரான பிரித்திவிராஜ் சவுகானின் வாழ்க்கை வரலாறு ஆகும்.
Shamshera
இந்த பட்டியலில் சமீபத்திய வெளியீடான ஷம்ஷேராவும்(Shamshera) சேர்ந்துள்ளது. பாலிவுட்டில் தயாராகி பான் படமாக வெளியான இதில் ரன்பீர் கபூர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். கரண் இயக்கிய இது ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாரானது ஆனால் நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் வெறும் ரூ.47.78 கோடிகளை மட்டுமே பெற்றுள்ளது. மிகவும் விலை உயர்ந்த இந்தி படங்களில் இது ஒன்றாக கருதப்பட்ட நிலையில் தற்போது வரவேற்பு பெறாதது படக்குழுவை ஏமாற்றத்தில் தள்ளி உள்ளது. இவ்வாறு அடுத்தடுத்து பாலிவுட் சூப்பர் ஹீரோக்களின் படங்கள் மண்ணை கவ்வுவது இந்தி திரைப்பட ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.