அஜித்தா இவர்? உடல் எடை கூடி வயதான தோற்றத்தில் அல்டிமேட் ஸ்டார்! வீடு திரும்பும் வைரல் வீடியோ இதோ !

இந்த காணொளியில் அஜித் முன்பை விட மிகவும் உடல் எடை அதிகரித்து வயதான ஒருவர் போல காட்சியளிக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Ajithkumar spotted in airport viral video

முன்னணி ஹீரோவான அஜித்குமார் தற்போது ஏகே 61 என்ற படத்தில் நடித்து வருகிறார் இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மூன்றாவது முறையாக  இந்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார் அஜித்குமார். வங்கி கொள்ளை தொடர்பான திரில்லர் கதை களத்தை கொண்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் ஒரு முக்கிய அட்டவணையை படமாக்கியது. அதன் பின்னர் தற்போது புனே புறப்பட்டுள்ளது படக்குழு.

மேலும் செய்திகளுக்கு... தம்பி எடுத்த அல்டிமேட் போட்டோஷூட்... ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு செம்ம மாஸாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்

ஏகே 61 படத்தில் அஜித்குமார் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரண்டு ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஓய்வில் இருக்கும் அல்டிமேட் ஸ்டார் தற்போது ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாரிஸ் ஆகியவற்றில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் ரசிகர்களை சந்தித்த  வீடியோக்கள், போட்டோக்கள்  வைரலாகின. இந்நிலையில்அஜித்தின் சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Ajithkumar spotted in airport viral video

இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரண்டாக்கி வருகின்றனர். அஜித் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்து சென்னை விமான நிலையம் திரும்பிய போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தெரிகிறது.  விமான நிலைய ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார் ஏ கே. இந்த காணொளியில் அஜித் முன்பை விட மிகவும் உடல் எடை அதிகரித்து வயதான ஒருவர் போல காட்சியளிக்கிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு... வலிமை பட நாயகி ஹூமா குரேஷியின் ஓவர் ஹாட் போட்டோஸ்

 

சென்னை திரும்பியுள்ள அஜித் ஓரிரு நாட்களில் ஏ.கே.61 -ன்  பூனே  ஷெட்யூலில் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படப்பிடிப்பு தான் இறுதி கட்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் மகாநதி சங்கர், தெலுங்கு நடிகர் அஜய், மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்க நீரோஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஏ கே 61 படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க பட குழு திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...  பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிங்களானு கேட்ட பெண்... தரமான பதிலடி கொடுத்த குஷ்பு - என்ன சொன்னாங்க தெரியுமா?

Ajithkumar spotted in airport viral video

இறுதியாக அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து எச் வினோத் போனி கபூர் கூட்டணிகள் இந்த படம் உருவானது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக பைக் ரேஸ் என்ற பெயரில் போதைப் பொருட்களை கடத்தும் கும்பலை ஒடுக்கும் முயற்சியில் இறங்கி இருப்பார். முந்தைய 2 படங்களும் தோல்வியை சந்தித்தால் ஏகே 61 குறித்த எதிர்பார்ப்பு அதிக அளவில் நிலவி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios