- Home
- Cinema
- திரிஷாவுக்கு பதிலாக பொன்னியின் செல்வனில் குந்தவையாக களமிறக்கப்பட்ட அசின்? இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு..!
திரிஷாவுக்கு பதிலாக பொன்னியின் செல்வனில் குந்தவையாக களமிறக்கப்பட்ட அசின்? இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு..!
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வனில் திரிஷா நடித்துள்ள குந்தவை கெட்-அப்பில் நடிகை அசின் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன், தற்போது படமாக்கப்பட்டு ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவுக்கு ரவி வர்மன், கலைக்கு தோட்டா தரணி, படத்தொகுப்புக்கு ஸ்ரீகர் பிரசாத் என அனுபவமிக்க டெக்னிக்கல் டீம் இப்படத்தில் பணியாற்றி உள்ளது.
இதையும் படியுங்கள்... 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கும் 5 ஹீரோயின்கள்! அட இவங்கல்லாம் நம்ப லிஸ்டுலையே இல்லையே?
பொன்னியின் செல்வன் படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளதாக நேற்று படக்குழு ஒரு அப்டேட்டை வெளியிட்டது. இதனிடையே பொன்னியின் செல்வனில் திரிஷா நடித்துள்ள குந்தவை கெட்-அப்பில் நடிகை அசின் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம்ம வைரல் ஆகின.
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அசின் தான் குந்தவை வேடத்தில் நடித்துள்ளாரோ என கேட்கும் அளவுக்கு மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளது அந்த புகைப்படம். ஆனால் அது ஒரிஜினல் இல்லையாம், ரசிகர்கள் உருவாக்கிய பேன் மேடு போஸ்டராம். இதைப்பார்த்த ரசிகர்கள், திருமணத்திற்கு பின்னர் நடிக்காமல் இருக்கும் நடிகை அசினை மீண்டும் நடிக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அஜித்தா இவர்? உடல் எடை கூடி வயதான தோற்றத்தில் அல்டிமேட் ஸ்டார்! வீடு திரும்பும் வைரல் வீடியோ இதோ !