- Home
- Cinema
- 'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கும் 5 ஹீரோயின்கள்! அட இவங்கல்லாம் நம்ப லிஸ்டுலையே இல்லையே?
'சந்திரமுகி 2' படத்தில் ராகவா லாரன்சுடன் நடிக்கும் 5 ஹீரோயின்கள்! அட இவங்கல்லாம் நம்ப லிஸ்டுலையே இல்லையே?
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சந்தரமுகி 2 ' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பமான நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தின் மொத்தம் 5 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த ஹீரோயின்கள் பற்றிய தகவலும் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது சந்திரமுகி 2 உருவாக உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்து விட்டதால் தற்போது, இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் மெகா பிளாக்பஸ்டர் சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் மைசூரில் மிக பிரமாண்டமாக துவங்கியது.
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பாக நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தனது ஆஸ்தான குருவும், பிரபல நடிகருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இதுகுறித்த புகைப்படங்களை ராகவா லாரன்ஸ் வெளியிட அது வைரலாகியது. மேலும் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் செய்திகள்: அஞ்சலிக்கு என்ன ஆச்சு? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே! ஷாக்கிங் போட்டோஸ்..
'சந்திரமுகி 2 ' படத்தின் பூஜையில், ராதிகா, வடிவேலு, போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டதால்... இவர்கள் நடிப்பது உறுதியானாலும், கதாநாயகியாக யார் நடிக்கிறார்? குறிப்பாக சந்திரமுகி கதாபாத்திரத்தில் யார் நடிக்க உள்ளார் என்பது குறித்த தகவலை படக்குழு இதுவரை தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, 'சந்திரமுகி 2 ' படத்தில் 5 நடிகைகள் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் யார்? யார்? என்பது குறித்த தகவலும் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: 51 வயதிலும்... 20 வயது ஹீரோயின் போல் தங்க நிற உடையில் தகதகவென மின்னி யங் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் குஷ்பு!
அதன் படி, ஏற்கனவே நடிகை லட்சுமி மேனன் இப்படத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது போல், 5 ஹீரோயின்களில் ஒருவராக லட்சுமி மேனன் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து, பிரபல நடிகை அஞ்சலி, சிருஷ்டி டாங்கே, மஹிமா நம்பியார், மஞ்சிமா மோகன், ஆகியரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் ஹீரோயின்கள் குறித்த தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.