இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை கையாண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது அசாத்தியமான ஒன்றுதான். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகிறார்.

தளபதி விஜய், திரிஷா, சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், எஸ்.ஜே.சூர்யா, மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், பிரபல நடன இயக்குனர் சாண்டி, மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மறைந்த நடிகர் மனோ பாலா, ஜார்ஜ் மரியான், கதிர், பிரபல மேடை கலைஞர் மாயா கிருஷ்ணன், வையாபுரி என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளம் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறது. 

உண்மையில் இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை கையாண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்குவது என்பது அசாத்தியமான ஒன்றுதான். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் மிகுந்த பாராட்டுகளை பெற்று வருகிறார். அண்மையில் இந்த படத்தில் இருந்து வெளியான "நா ரெடி" பாடல் சில சர்ச்சைகளை சந்தித்தாலும், இளைஞர்கள் மத்தியிலும், விஜயின் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளிவர உள்ள நிலையில், தற்பொழுது இந்த படத்தில் நடித்துள்ள பிரபல நடிகரும், இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் தனது கதாபாத்திரம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள் : ஷாருக்கானின் ஜவான்.. பெரும் தொகைக்கு ஆடியோ உரிமத்தை பெற்ற நிறுவனம்!

இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் தன்னுடைய பேவரைட் நாயகி திரிஷாவுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறியுள்ளார். திரிஷாவுடன் தனக்கு காட்சிகள் இருப்பதாகவும், இது சற்று பெரிய திரைப்படம் என்றும் கூறிய அவர், தன்னுடைய கதாபாத்திரம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.

Scroll to load tweet…

மேலும் இந்த திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் "ஜே" என்ற எழுத்தில் துவங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தில் நீங்கள் வில்லனா?, விஜயின் நண்பரா? அல்லது வேறு விதமான கதாபாத்திரமா? என்று கேட்டதற்கு "இந்த மூன்றும்" என்று பதில் அளித்து, ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

இதையும் படியுங்கள் : சிவகார்த்திகேயன் - முருகதாஸ் Combo.. ஹீரோயினா "அவங்க" நடிக்க அதிக வாய்ப்பு இருக்காம்!