சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸ் காம்போ.. ஹீரோயினா "அவங்க" நடிக்க அதிக வாய்ப்பு இருக்காம்!

2001ம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் "தீனா". குருவைப் போலவே இவரும் தனது இயக்குனர் பயணத்தை துவங்கியது தல அஜித்திடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Joining hands with Director AR Murugadoss Famous Actress may join the movie

ஆரம்ப காலகட்டத்தில் பிரபல இயக்குனர் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்தவர் தான் பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். குருவைப் போலவே இவரும் தனது இயக்குனர் பயணத்தை துவங்கியது தல அஜித்திடம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
2001ம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் தான் தல அஜித் நடிப்பில் வெளியான "தீனா". இவர் இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளியான "ரமணா" திரைப்படம், தமிழ் திரை உலகத்தையே இவரை திரும்பிப் பார்க்கச் செய்தது. தொடர்ச்சியாக இவர் இயக்கி வெளியிட்ட கஜினி, ஏழாம் அறிவு மற்றும் துப்பாக்கி என்று எல்லா திரைப்படமும் ஹிட் ஆக, தமிழ் திரை உலகின் "மோஸ்ட் வான்டெட்" இயக்குனராக மாறினார் முருகதாஸ். 

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் என்று பல மொழிகளிலும் சிறப்பாக பயணித்து வந்த நிலையில், "யானைக்கும் அடி சறுக்கும்" என்ற சொல்லுக்கு இணங்க, இறுதியாக கடந்த 2020ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "தர்பார்" திரைப்படம் இவருக்கு ஒரு சிறிய சருக்களை கொடுத்தது.

இதையும் படியுங்கள் : அவருக்கே உரித்தான பாணியில் வரும் நெல்சன்.. ஜெயிலர்!

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு அந்த திரைப்படம் விருந்தாக அமைந்திருந்தாலும், விமர்சன ரீதியாக தர்பார் திரைப்படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களை இயக்காமல் இருந்து வரும் நிலையில், தற்பொழுது ஒரு ஆக்சன் படம் ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். 

ஏறத்தாழ இந்த படத்திற்கான துவக்கட்ட பணிகள் முற்றிலும் முடிவடைந்துள்ள நிலையில், இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை Mrunal Thakur கதையின் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் வட்டார செய்திகள் கூறுகின்றது. 

Mrunal Thakur

இதுகுறித்து அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றது என்றும், லுக் டெஸ்ட் முடித்த பிறகு இந்த கதைக்குள் அவர் நுழைவாரா? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும். அப்படி Mrunal Thakur இந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் அவர் நடிக்கும் முதல் தமிழ் படமாக இதுவாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : 5 சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க முடியாது என கூறிய அசின்! ஏன் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios