ஷாருக்கானின் ஜவான்.. பெரும் தொகைக்கு ஆடியோ உரிமத்தை பெற்ற நிறுவனம் - எத்தனை கோடி தெரியுமா?
220 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், அட்லீ விஜயை வைத்து இயக்கிய பிகில் படத்திற்கு பிறகு அவர் இயக்குகின்ற திரைப்படம்.
பிரபல இயக்குனர் அட்லி குமார் இயக்கத்தில் ஐந்தாவதாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் பாலிவுட் பாஷா ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள "ஜவான்". இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரியாமணி மற்றும் பிரபல நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வருகின்ற செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ள இந்த திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை தற்பொழுது பிரபல டி சீரிஸ் (T-Series) நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்த வாரம் இந்த படத்தின் டீசர் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ஆடியோ உரிமம் சுமார் 36 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதையும் படியுங்கள் : இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்!
ராக் ஸ்டார் அனிருத் இசையில், இந்த திரைப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 220 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், அட்லீ விஜயை வைத்து இயக்கிய "பிகில்" படத்திற்கு பிறகு அவர் இயக்குகின்ற திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆண்டு பிகில் படத்தை முடித்த பிறகு 2021ம் ஆண்டே இந்த படத்திற்கான பணிகளை இயக்குனர் அட்லீ துவங்கினர். கடந்த ஜூன் மாதமே இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தாமதமானதால் தற்போது செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அட்லீ, A for Apple என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான "சங்கிலி புங்கிலி கதவ தொற" என்ற படத்தையும், 2020ம் ஆண்டு வெளியான "அந்தாகாரம்" என்ற படத்தையும் தயாரித்து வெளியிட்டார்.
இதையும் படியுங்கள் : ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசளித்த முகேஷ் அம்பானி..!