ராம் சரண் மகளுக்கு தங்க தொட்டில் பரிசளித்த முகேஷ் அம்பானி..! விலை மட்டும் இவ்வளவா?
நடிகர் ராம் சரண் - உபாசனா தம்பதியின் மகளுக்கு இன்று பெயர் சூட்டு விழா, மிக பிரமாண்டமான முறையில் நடந்த நிலையில், இதில் கலந்து கொண்ட முகேஷ் அம்பானி தங்க தொட்டிலை பரிசளித்துள்ளநிலையில், இதன் விலை குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
திருமணமாகி 10 வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமான, ராம் சரண் மனைவி உபாசனா காமினேனி... தன்னுடைய முதல் குழந்தையை ஜூன் 20 அன்று ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பெற்றெடுத்தார். இந்நிலையில், இன்று ராம் சரணின் மகளுக்கு பெயர் சூட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்தார் சிரஞ்சீவி.
அதன் படி மலர் மற்றும் இலைகள் நிறைந்த இயற்கை தீம்களை உள்ளடக்கிய உன்னதமான அலங்காரங்களுடன் செயற்கையான மாமரங்கள் என, பார்ப்பதற்கே இயற்க்கை பூங்காவை போல் பிரமாண்டமாக இந்த விழாவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்ட இந்த பெயர் சூட்டு விழாவில், இந்திய டாப் பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான முகேஷ் அம்மணி தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டார். மேலும் இவர் ராம் சரண் - உபாசனா தம்பதிகளின் மகளுக்கு தங்க தொட்டில் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளனர்.
இவர்கள் வழங்கியுள்ள தங்க தொட்டில், 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் விலை ரூ.1 கோடி என கூறப்படுகிறது. மேலும் சாம் சரண் - உபாசனா இணைந்து தங்களின் மகளுக்கு KKK எங்கிற வரிசையில் வரும் படி, க்ளின் காரா கோனிடெலா என பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.