பிரபல சீரியல் நடிகை சித்ரா திருமணமான இரண்டு மாதத்திலேயே தற்கொலை முடிவை எடுத்துள்ளதால், அதற்கான காரணம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று அவர் கடைசியாக கலந்து கொண்ட, ஷூட்டிங்கின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.

மேலும் செய்திகள்: சிக்கென இருக்கும் யாஷிகா இடையில் நச்சுனு குத்தியிருக்கும் டாட்டூ..! மூச்சு முட்ட வைத்த தாராள கவர்ச்சி..!
 

டிசம்பர் 9 ஆம் தேதி ஷூட்டிங் முடிந்து, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், கணவர் ஹேமந்த்துடன் தங்கிய போது, குளிக்க செல்வதாக அவரை வெளியே அனுப்பி விட்டு பட்டு புடவையில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல் மற்றும், தாவங்கட்டையில் ரத்த காயம் இருந்ததால் இது உண்மையிலேயே தற்கொலை தானா? அல்லது கொலையா என்கிற சந்தேகம் தற்போது வரை பலரது மனதிலும் இருந்து வருகிறது. ஆனால் நேற்று நடந்த இவரது பிரேத பரிசோதனையின் முதல் கட்ட தகவலில் சித்ரா தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தார் என்பதும், கன்னத்தில் இருந்தது அவரது நகக்கீறல் என்பதையும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்: பண மோசடி செய்த பிரபல நடிகர் கிருஷ்ணா..! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!
 

சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது, அவரது கணவர் மட்டுமே உடன் இருந்ததால், போலீசார் மூன்றாவது நாளாக இன்றும்  அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். மேலும் இன்றைய விசாரணையில், சித்ரா கடைசியாக கலந்து கொண்ட படப்பிடிப்புகளின், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூன்று பேர் என மொத்தம் 5 பேரிடம், சுமார் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடந்துள்ளது.

மேலும் செய்திகள்: உங்களால் தான் பிரச்சனையே வருது என கூறும் சித்ரா..! கதறி அழுத பாண்டியன் ஸ்டோர் கதிரின் வீடியோ..!
 

விசாரணையின் முடிவில், சித்ரா எப்போதும் போல் படப்பிடிப்பில் சாதாரணமாகவே இருந்ததாகவும், அவரிடம் எதற்காகவும் எந்த பிரச்னையும் நடைபெற வில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுவரை சித்ராவின் தற்கொலைக்கான சரியான காரணம் தெரியாததால், பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: சித்ரா தற்கொலை... இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்..! செம்ம ஷாக்கில் ரசிகர்கள்..!
 

இவர்களை தொடர்ந்து, அடுத்ததாக ஹேமந்த்தின் தந்தையிடம் சித்ரா தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. சித்ராவின் குடும்பத்தினருக்கு இவர் மூலம் தான் சித்ரா இறந்த தகவல் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.