பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடந்த வாரம் தான் சில போட்டியாளர்களின் உண்மை முகத்தை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம் சர்வாதிகாரியாக இருந்த ஐஸ்வர்யா, மனதில் தேக்கி வைத்திருந்த வஞ்சகத்தை டாஸ்க் மூலம் நிறைவேற்றி கொண்டார்.

இவர் நடந்து கொண்ட விதம், மிகவும் மோசமாக இருந்ததால் ரசிகர்களுக்கு இவர் மீதான கோபம் அதிகரித்தது. 

பிக்பாஸ் வீட்டில் கண்டிப்பாக 100 நாட்களை நிறைவு செய்து, வெற்றியாளராக மட்டுமே வெளியில் வருவேன் என நம்பிக்கொண்டிருந்த ஷாரிக் கனவை பொய்யாக்குவது போல் இந்த வாரம், இவர் தான் வெளியேற்றப்பட்டார்.

வெளியில் வந்த இவர், பிக்பாஸ் வீட்டில் பொய்யாக இருப்பது யார் என எழுப்பப்பட்ட கேளிவிக்கு. சென்ராயன் தான் பொய்யாக இருப்பதாகவும், டேனி தன்னிடம் அவர் இப்படி கிடையாது என்று பல முறை கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார். மேலும்டேனி மிகவும் ஜாலியான ஒரு மனிதர், வீட்டில் அனைவருக்கும் அவரிடம் பிடிக்காதது அவருடைய குரல் தான் என்றும், பொன்னம்பலம் 5 நாள் ஒருமாதிரி இருப்பார், கமல்ஹாசன் அவர்கள் வந்தால் வேறொரு நபராக மாறிவிடுவார் என்றும் கூறியுள்ளார்.

100 நாட்கள் இருக்க விருப்பம் தான், ஆனால் பரவாயில்லை வெளியே வந்தது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார் ஷாரிக்.