ரூ.15,000 டெபாசிட்டுக்கு 10 லட்சத்துக்கு மேல் வருமானம்! இப்படி முதலீடு செய்யுங்க!
போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ரூ.15,000 முதலீடு செய்தால் ரூ.10.71 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம். சிறிய தொகையைச் சேமித்து உத்தரவாதமான லாபம் பெற நினைப்பவர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானது.
Post Office Recurring Deposit Scheme
அஞ்சல் அலுவலக RD திட்டத்தில் ஒருவர் தனியாக அல்லது கூட்டாக கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சார்பிலும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் ஒரு கணக்கு தொடங்கலாம்.
தபால் அலுவலகத் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ஆண்டுதோறும் 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. காலாண்டு அடிப்படையில் இந்த வட்டி கொடுக்கப்படுகிறது.
Recurring Deposit Account
தபால் அலுவலக RD திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத்தொகை மாதம் ரூ. 100 அல்லது முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. RD கணக்கிற்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆனால் முதிர்வுக்குப் பின் கணக்கை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முன்கூட்டியே கணக்கை மூடலாம்.
தபால் அலுவலக RD இல் 12 தவணைகள் டெபாசிட் செய்த பிறகு, RD கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம்.
Post Office Recurring Deposit Interest
போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ரூ 5,000, ரூ. 10,000 மற்றும் ரூ 15,000 மாதாந்திர முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) பிறகு எவ்வளவு வருமான் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், மொத்த வைப்புத்தொகை ரூ. 3,00,000 ஆக இருக்கும். இதில் வட்டி ரூ. 56,830 சேர்ந்து, மொத்த முதிர்வுத் தொகை ரூ. 3,56,830 கிடைக்கும்.
Post Office Recurring Deposit Benefits
ஐந்தாண்டுகளுக்கு மாதம் ரூ.10,000 முதலீட்டில், மொத்த டெபாசிட் தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். இதற்கு வட்டி ரூ.1,13,659 இணைந்தால், முதிர்வுத் தொகை ரூ.7,13,659 ஆக இருக்கும்.
மாதாந்திர முதலீட்டுத் தொகையை மாதம் ரூ.15,000 ஆக உயர்த்தி, ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்த டெபாசிட் ரூ.9,00,000 ஆகும். வட்டித் தொகை ரூ.1,70,492 கிடைக்கும். அப்போது, முதிர்வுத் தொகை ரூ.10,70,492 கிடைக்கும்.