பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சர்வாதிகார பிக்பாஸ் ராணியாக மாறி, பொதுமக்களாக இருக்கும் மற்ற போட்டியாளர்களை கொடுமை படுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. இவருக்கு தளபதியாக இருந்து இவர் கட்டளையிடுவதை செய்பவராக இருக்கிறார் டேனி.

இதனால் டேனியை தவிர மற்ற அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல் கொடுமை செய்கிறார். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், சென்ராயன் டீ குடித்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஐஸ்வர்யா அவரிடம் இருந்து டீ-யை வாங்கி கொண்டு, இனி யாருக்கும் டீ, காபி, எதுவும் இல்லை என கூறுகிறார்.

இதனால் கடுப்பான சென்ராயன், எல்லாவற்றிற்கும் அளவு உள்ளது என உச்ச கட்ட கோவத்தில் பேசுகிறார். இதற்கு ஐஸ்வர்யா வாயை மூடு என கூறி பதில் கொடுக்கிறார்.

இதைதொடர்ந்து பேசும் சென்ராயன், ஒரு டீ போட்டதில் என்ன தவறு உள்ளது என கேட்கிறார். இதற்கு ரூல்ஸ் சொன்ன பாலோ பண்ணுங்க என குரலை உயர்த்துகிறார் ஐஸ்வர்யா. பின் சண்டை முற்றுகிறது ஒரு நிலையில், சென்ராயன் ஹே நீ போ லூசு என ஐஸ்வர்யாவை திட்ட அவரும் நீ போ லூசு என்கிறார், சென்றாயன் கழுதை என திட்ட ஐஸ்வர்யா அவரை நாய் என கூறி திட்டுகிறார். இதனால் இவர் மீது பலருக்கும் வெறுப்பு அதிகரித்துள்ளது. மேலும் இன்று இதை வைத்து பெரிய பிரச்சனை வெடிக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.