இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13வது சீசனில் பங்கேற்றவர் அஸிம் ரியாஸ். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில்  பங்கேற்ற பிறகு பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. பிக்பாஸ் வீட்டில் இவருக்கும் ஹிமான்ஷி குரானாவிற்கும் இடையே மலர்ந்த காதல் இன்று வரை நீடித்து வருகிறது. இருவரும் இணைந்து இசை ஆல்பங்களில் நடித்து வருகிறார்கள் .

 

 

இதையும் படிங்க: துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!

தமிழ் பிக்பாஸ் ரசிகர்களைப் போலவே அசிமிற்கும் இந்தியில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் அசிம் ரியாஸ் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அசிம் வழக்கம் போல் தனது சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, சிலர் பின்புறத்தில் இருந்து தாக்கியதாகவும், இதனால் தனது கால்கள், கை, முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. 

 

 

இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பகிர்ந்துள்ள அவர், நான் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது பைக்கில் வந்தவர்கள் என்னை பின்னால் இருந்து தாக்கினார்கள். என் முன்பு வந்து தாக்கவில்லை என்று கூறி தனக்கு காயம் பட்ட இடங்களை காட்டியுள்ளார். இதனால் கொதிப்படைந்துள்ள ரசிகர்கள் அசிம் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அசிம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம். இனிமேல் வெளியே செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளனர்.