படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!
அமலா பால் ஆண் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சர்ச்சை என்றாலே இவர் தான் என்ற பெயரை விரைவில் எடுத்துவிடுவார் போல் தெரிகிறது நம்ம அமலா பால். “தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அந்த விவகாரத்தின் போதும் ஏகப்பட்ட வதந்திகள், கிசுகிசுக்கள் காற்றில் கசிந்தன.
அதன் பிறகு ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்து அனைவரையும் அதிரவைத்தார். அந்த படம் அமலா பாலுக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. ஆனால் அது வெறும் போட்டோ ஷூட், கல்யாணம் எல்லாம் இல்லை என அமலா பால் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்போது லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் எதுவும் இல்லாததால் அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால், நாள்தோறும் ரக ரகமாய் போட்டோக்களை வெளியிட்டு கிளு கிளுப்பு கூட்டி வருகிறார்.
அதில் அமலா பால் தனது ஆண் நண்பருக்கும், ரசிகருக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின. இன்னொரு முறை ஆண் நண்பர்களுடன் வேட்டி, சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
இப்படி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால், அவர்களுடன் சரக்கடிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
எப்போது பார்த்தாலும் ஆண் நண்பர்களுடன் லூட்டி அடிப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால், போட் ஹவுஸில் படுக்கையில் ஆண் நண்பருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
மற்றொரு போட்டோவில் நண்பர்களுடன் இணைந்து கையில் பீர் பாட்டில்களுடன் ஆடிப்பாடி கொண்டாட்டமாக இருப்பது போல் தெரிகிறது.
அமலா பாலின் இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் சர்ச்சை என்றாலே அமலா பால் என மாறிவிடுமோ என கவலையுடன் யோசித்து வருகின்றனர்.