போட்ட காசெல்லாம் போச்சு; பேபி ஜான் படத்தால் அட்லீக்கு இத்தனை கோடி நஷ்டமா?
தமிழில் தளபதி விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆன பேபி ஜான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடிவாங்கி உள்ளதால் கடும் நஷ்டத்தையும் சந்திக்க வாய்ப்புள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. இவர் தமிழில் கடைசியாக இயக்கிய படம் பிகில். விஜய் நடித்த இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இதற்கு காரணம் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அவர் இயக்கிய ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் அட்லீ கால்ஷீட் கேட்டு பாலிவுட் நடிகர்கள் க்யூவில் நிற்பதால், அவர் தற்போது கோலிவுட் பக்கம் திரும்பும் ஐடியாவில் இல்லை. இயக்குனராக பாலிவுட்டில் வெற்றிகண்ட அட்லீ, தயாரிப்பாளராகவும் அங்கு எண்ட்ரி கொடுத்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸ் ஆன பேபி ஜான் படம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகி உள்ளார் அட்லீ. இது அவர் தமிழில் இயக்கி வெற்றிகண்ட தெறி படத்தின் ரீமேக் ஆகும்.
இதையும் படியுங்கள்... ‘பேபி ஜான்’ தெறி ரீமேக்கா? இல்லையா? அட்லீ விளக்கம்
பேபி ஜான் படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இப்படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் கீர்த்தி. இப்படத்திற்கு தமன் இசையமைக்க, பாலிவுட் நடிகர் சல்மான் கானும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேபி ஜான் திரைப்படம் கடந்த டிசம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
ஆனால் படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லாததால் பாக்ஸ் ஆபிஸில் பயங்கர அடி வாங்கி உள்ளது. இப்படம் சுமார் 160 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் ரிலீஸ் ஆகி நான்கு நாட்களில் வெறும் ரூ. 23.90 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் வெறும் ரூ.60 கோடி மட்டுமே வசூலிக்கும் என கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை – ஒரு டீசர்ட் இத்தனை லட்சமா?