அதிர வைக்கும் அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலை – ஒரு டீசர்ட் இத்தனை லட்சமா?
Atlee Givenchy T Shirt Price : பேபி ஜான் படத்தின் புரோமோஷனுக்காக அட்லீ அணிந்திருந்த டீசர்ட்டின் விலையைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் காணலாம்.
Atlee Givenchy T Shirt Price
ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்த ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் அட்லீ. முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படம் மௌன ராகம் படத்தின் காப்பி என்று சொல்லப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் வந்த தெறி என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
Atlee Givenchy T Shirt Price
இப்படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் பிகில் ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் குறைவான படங்களை இயக்கி மாஸ் இயக்குநராக வலம் வந்தார். தமிழில் இவர் இயக்கிய 4 படங்களுமே ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கொடுத்தது.
Atlee Givenchy T Shirt Price
ஒரு இயக்குநராக மட்டுமின்றி A for Apple film Production என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்கள் தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் மூலமாக ஏற்கனவே சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தையும், அந்தாகாரம் என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இப்போது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் கலீஸ் இயக்கியுள்ளார். பேபி ஜான் படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
Atlee Givenchy T Shirt Price
ஜாக்கி ஷெராஃப், சஞ்சய் மல்கோத்ரா, ராஜ்பால் யாதவ் ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் நாளை 25ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் பேபி ஜான் பட புரோமோஷனில் மனைவி பிரியாவுடன் அட்லீயும் கலந்து கொண்டார் அப்போது அவர் அணிந்திருந்த டீசர்ட் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதையடுத்து அந்த டீசர்ட்டின் விலை பற்றி ஆராய்ந்து பார்த்த போது அந்த டீசர்ட்டின் விலை ரூ.1,12,960 என்று தெரியவந்துள்ளது. பிரெஞ்சு பிராண்டு கொண்ட கிவன்ஷ் டீ சர்ட்டை அட்லீ அணிந்திருந்தார். அது லேசாக கிழிந்து கிழிந்து இருந்துள்ளது. இத்தனை லட்சத்திற்கு அந்த டீசர்ட்டில் என்ன இருக்கிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.