கடந்த வாரம், கேப்டன்சி டாஸ்கில் அர்ச்சனா வெற்றி பெற்றாலும், அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால், இரண்டாவது இடத்தை பிடித்த, பாலா இந்த வாரத்து கேப்டனாக தேர்வுசெய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்நிலையில் தற்போது பாலா - அனிதா இடையே வரும் பிரச்சனை தான் இரண்டாவது புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்: 10 இயக்குனர்கள் அறிவித்த சிம்பு படத்தின் வேற லெவல் டைட்டில்..!
 

பாலாவின் இந்த வார கேப்டன்சி எப்படி இருந்தது என, பிக்பாஸ் கேட்க, ஒவ்வொருவராக எழுந்து வந்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில் அனிதா, சோம், கேபி, தூங்கும் போது மட்டும் சொன்ன பாலா, ஷிவானி தூங்கியதை மட்டும் சொல்லவில்லை என கூறுகிறார்.

இதற்க்கு பாலா ஏதோ கூற வர, அனிதா ஆவேசமாக நான் தான் நாமினேட் செய்து கொண்டிருக்கிறேன், எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தான் கூற முடியும், நாமினேட் பண்ணும் போது இடையில் பேச வேண்டாம் என கூறுகிறார். பாலா சொல்ல வந்ததை காதில் கூட வாங்காமல், நீங்கள் தான் என்னிடம் சொன்னீங்க நாமினேட் பண்ணும் போது இடையில் பேச வேண்டாம் என அனிதா கூற, அதற்கு பாலா பொய் சொல்லும்போது எப்படி பேசாமல் இருக்க முடியும் என கேட்கிறார். 

மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டியிருக்கும் ஓவர் டைட் உடையில்... இளசுகள் மனசு குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு..!
 

அனிதாவும் விடாப்பிடியாக பொய்யெல்லாம் சொல்லவில்லை, உங்களை மட்டும் எதுவுமே சொல்ல கூடாதா பாலா என கேட்க, ஷிவானி அழுவது போல் தெரிகிறது.

மேலும் செய்திகள்: ரியோ மதிப்பெண்ணுக்கு ஆப்பு வைக்கும் ரம்யா..! கேபியை டார்கெட் பண்ணும் பாலா..! வீடியோ
 

அதே நேரத்தில் இன்று, தான் பேசும்போது அடுத்தவர் குறுக்கிட்டு பேசுவதை தவறு என்று கூறும் அனிதா, ஆரி என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட காது கொடுத்து கேட்காமல், என் புருஷனை பற்றி பேசாதீங்க என, காட்டு கத்து கத்தியபோது இந்த அறிவு இல்லையா என நெட்டிசன்கள் வச்சி செய்து வருகிறார்கள்.

தற்போது வெளியாகியுள்ள பரபரப்பான புரோமோ இதோ...