பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாகவே, பந்துகளை பிடித்து தங்களுடைய மதிப்பெண்களை போட்டியாளர்கள் உயர்த்தி கொள்ளவேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அணியணியாக பிரிந்து விளையாடிய போட்டியாளர்கள், நேற்றில் இருந்து தனித்தனியாக விளையாடி வருகிறார்கள்.

இந்த போட்டி தற்போது நான்காவது நிலையை அடைந்துள்ளது. அதாவது பிக்பாஸ் தங்க நிற பந்துகளை பிடிக்க வேண்டும் என கூறி, ஸ்பெஷல் பவர் ஒன்றை செயல்படுத்தலாம் என 
கூறியதால் போட்டியாளர்களுக்குள் வரும், பொறாமை, பிரச்சனைகள் தான் இன்றைய முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து ஷிவானி படித்து காட்டுகிறார். அப்போது தங்க நிற பந்தை நீங்கள் பிடித்து விட்டால், ஒரு பலகையில் வைக்கப்பட்டிருக்கும் சக்திகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, அதனை செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாலா உள்களுடைய மதிப்பெண்களில் 100 புள்ளிகள் அதிகரிக்கப்படுகிறது என்பதை படிக்கிறார். ரம்யா ரியோவை தேர்வு செய்து, அவரது மதிப்பெண்களை பூஜ்ஜியம் ஆக்குகிறார்.

பின்னர் பாலாவை பெயரை கேப்ரில்லா சொல்ல, அதற்க்கு பாலா கேபி அடுத்த ஜீரோ நீ தான் என பொறாமை உணர்வுடன் பேசுவது முதல் புரோமோவில் வெளியாகியுள்ளது. எனவே நேற்றைய தினம் போல் இன்றைய தினமும் பல பிரச்சனைகளும் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்லும் என்பது முதல் புரோமோவில் இருந்தே தெரிகிறது.