நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ள, படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 10 இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து, இந்த படத்தின் வித்தியாசமான டைட்டிலை அறிவித்துள்ளனர்.

பிரபல இயக்குனர்கள் வெங்கட்பிரபு, ஆனந்த் சங்கர், விக்னேஷ் சிவன், விஜய்மில்டன், கார்த்திக் சுப்புராஜ், பா ரஞ்சித், சந்தோஷ் ஜெயகுமார், அஸ்வத், சாம் ஆண்டன், எம்.ராஜேஷ் ஆகிய 10 இயக்குனர்கள் இணைந்து, சரியாக 10 மணிக்கு சிம்பு - கெளதம் கார்த்தி படத்தின் வேற லெவல் டைட்டிலை அறிவித்துள்ளனர்.

’பத்து தல’  என பெயரிடப்பட்டுள்ள இந்த படம், கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'முஃத்தி' என்கிற படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது. இந்த படத்தை, இயக்குனர் கிருஷ்ணா இயக்க உள்ளார். இவர் சூர்யா - ஜோதிகா நடித்த 'சில்லுனு ஒரு காதல்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: உடலோடு ஒட்டியிருக்கும் ஓவர் டைட் உடையில்... இளசுகள் மனசு குலுங்க குலுங்க கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு..!
 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.