இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜீத் - நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விஸ்வாசம்'. காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் சிவா. 

மேலும், அணைத்து தரப்பு ரசிகர்களையும் இப்படம் ரசிக்க வைத்தது மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

'விஸ்வாசம்' திரைப்படம் வெளியான நாளில் இருந்தே... பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த படத்தில் டி இமான் இசையில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் யு டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

Scroll to load tweet…

இந்த தகவலை இசையமைப்பாளர் டி.இமான் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை, தல ரசிகர்கள் பலர், ஷேர் செய்து, சமூக வலைத்தளத்தையே தெறிக்க விட்டு வருகிறார்கள்.