'டிரைவர் ஜமுனா' படக்குழுவின் திடீர் அறிவிப்பு..! சமந்தாவுடன் மோதாமல் பின்வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம், நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில், திடீரென இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
 

Aishwarya Rajesh Starring  Driver jamuna movie is postponed

நடிகை நயன்தாரா பாணியில், தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது 18 ரிலீஸ் பட நிறுவனம் சார்பில், எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கும், டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை 'வத்திகுச்சி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிங்சிலின் இயக்கி உள்ளார். 

Aishwarya Rajesh Starring  Driver jamuna movie is postponed

Ranjithame Song: பொறுப்புணர்வோடு செயல்படாத விஜய்..? 'வாரிசு' படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பு!

ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கார் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல்வேறு ஆக்ஷன் சீன்களில் டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், மணிகண்டன் ராஜேஷ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Aishwarya Rajesh Starring  Driver jamuna movie is postponed

சமந்தா படத்துக்கு இவ்ளோ மவுசா..! ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கான வசூலை வாரிக்குவித்த யசோதா

இதில் கூறியுள்ளதாவது, நவம்பர் 11ஆம் தேதி வெளியாவதாக இருந்த, எங்கள் 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம். அத்துடன் மிக விரைவில் திரைப்படத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும், தங்களின் மேலான ஆதரவுக்கும், அன்பிற்கும், தலை வணங்குகிறோம். என்று பட குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். நவம்பர் 11 ஆம் தேதி நடிகை சமந்தா நடிப்பில் வெளியாக உள்ள 'யசோதா' படத்துடன்  டிரைவர் ஜமுனா மோத இருந்த நிலையில், திடீர் என ஐஸ்வர்யா ராஜேஷ் படம் பின் வாங்கியதால் அது முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது. 

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா... பிரியாணி சமைத்து தடபுடலாக விருந்து வைத்த மம்முட்டி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios