Ranjithame Song: பொறுப்புணர்வோடு செயல்படாத விஜய்..? 'வாரிசு' படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பு!
நடிகர் விஜய்யின் 'வாரிசு' படத்தில் இருந்து சில தினங்களுக்கு முன் வெளியாகி... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும், 'ரஞ்சிதமே' பாடலுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷனிலும் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் 'வாரிசு' படத்தில் இடம் பெற்ற. 'ரஞ்சிதமே... ரஞ்சிதமே...' லிரிகள் பாடல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில் நேஷனல் கிரஷ் ராஷ்மிகாவுடன் இணைந்து விஜய் போட்ட குத்தாட்டம் தற்போது வரை ரசிகர்களை ஆட வைத்து வருகிறது. மேலும் குழந்தைகள் பலரும், இந்த படத்தின் பாடலுக்கு வெறித்தனமாக ஆட்டம் போடும் சில வீடியோஸ் சமூக வலைதளத்தில் வெளியாகி பட குழுவினரை உற்சாகமடைய வைத்துள்ளது.
இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் வெளியானது முதலே, இந்த பாடலை பல பாடல்களில் இருந்து உருவி இசையமைப்பாளர் தமன் உருவாக்கியுள்ளதாக , நெட்டிசன்கள் தாறுமாறாக ட்ரோல் செய்து வந்த நிலையில் தற்போது இந்த பாடலுக்கு எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளது.
ரஞ்சிதமே பாடலில் இடம்பெற்றுள்ள 'உச்சு கொட்டும் நேரத்திலே உச்சகட்டம் தொட்டவளே' என்ற வரிகள் தான், இந்த சர்ச்சைக்கு காரணம். இந்த வரிகளின் உண்மையான அர்த்தம் தெரியாமலேயே பல சிறுவர்கள்.. இந்த வரிகளை பாடி வருவதாக நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் சமூக வலைத்தளத்தில் போர் கொடி உயர்த்தி... எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பிக்பாஸ் வீட்டில் அடி தடி..! போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!
மேலும் விஜய் போன்ற பெரிய நடிகர்கள், தங்களுடைய படங்களில் இடம்பெறும் வார்த்தைகள் கூட எப்படி உள்ளது என ஆராய்ந்து பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தையும் முன் வைத்து வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள 'வாரிசு' படத்தில் நடிகர் ஷாம், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, குஷ்பு, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது. முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜு பிரமாண்டமாக 'வாரிசு' படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.