பிக்பாஸ் வீட்டில் அடி தடி..! போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!
பிக்பாஸ் ஹிந்தி சீசன் 16 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் அர்ச்சனா கெளதம், சக போட்டியாளரை தாக்கியதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழி பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடி என்றால், அது சல்மான் கான் ஹிந்தியில் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். மற்ற மொழியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது தான், சீசன் 5 மற்றும் சீசன் 7-யை எட்டியுள்ளது. ஆனால் ஹிந்தியில் சீசன் 16 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற மொழிகளை விட, ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகம் சர்ச்சைகளை உள்ளடக்கியது. இதற்க்கு முன்னர், சல்மான் கான் நேரடியாக சில போட்டியாளர்களை நீக்கியுள்ளார் அதே போல் சில காரணங்களுக்காக, போட்டியாளர்கள் வெளியேற்றவும் பட்டுள்ளனர்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வந்த அர்ச்சனா கெளதம் என்கிற நடிகை சகா போட்டியாளரான ஷிவ் தாக்ரே என்பவருக்கும் இடையே பிரச்சனை வந்துள்ளது. பின்னர் அது கை கலப்பாக மாற, அர்ச்சனா ஷிவ் தாக்ரேவை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் அர்ச்சனாவை அதிரடியாக வெளியேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து சிலர் அர்ச்சனாருக்கு எதிராகவும், சிலர் அர்ச்சனா மிகவும் வலிமையான போட்டியாளர், எனவே அவரை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.