MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • VTK 50th Day Celebration: 'வெந்து தணிந்தது காடு' 50ஆவது நாள் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு! புகைப்படங்கள்!

VTK 50th Day Celebration: 'வெந்து தணிந்தது காடு' 50ஆவது நாள் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு! புகைப்படங்கள்!

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வென்று தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், இந்த படத்தின் 50-ஆவது நாள் வெற்றி விழா இன்று நடந்து முடிந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இதோ... 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 09 2022, 09:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பின்னர், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
29

ஏற்கனவே சிம்புவை வைத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான, 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய இரண்டு படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கும் வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

Biggboss: பொய் சொல்லி வசமாக சிக்கிய தனலட்சுமி! அப்பா கூட இல்லனு சொல்லிட்டு அவர் கூடவே ரீல்ஸ்.. வெளியான வீடியோ!

39

பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் தயாரித்திருந்த இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக சுத்தி இத்னானி நடித்திருந்தார்.

49

வழக்கமாக காதல் கதைகளையே மிகவும் சுவாரஸ்யமாக இயக்கும் கௌதம் மேனன், சிம்புவை வைத்து இந்த முறை மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டிருந்தார்.

நவம்பர் 11 ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்..! ஒரே நாளில் இத்தனையா? முழு விவரம்

59

முத்து என்கிற கிராமத்து இளைஞன் மும்பைக்கு சென்று எப்படி ஒரு கேங்ஸ்டர் ஆக உருவாகிறார் என்பதை மிகவும் ஆழமான கதையுடன் இந்த படம் கூறியது.

69

இந்த படத்திற்காக சிம்பு சுமார் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து யங் லுக்கில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது என்றால் அது ஏ.ஆர்.ரகுமானின் இசை என கூறலாம்.

தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் சொன்னது எல்லாம் பொய் ? அவள் பணக்கார பெண் உண்மையை புட்டு புட்டு வைத்த நண்பர்கள்..!

79

குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல், தற்போது வரை ரசிகர்கள் பலரது காலர் டியூன் ஆக மாறி உள்ளது. இந்நிலையில் இன்று படக்குழு ஐம்பதாவது நாள் வெற்றி விழாவை மிகவும் கோலாகலமாக கொண்டாடி உள்ளனர்.

89

செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் சில விமர்சனங்களுக்கு மத்தியில் மத்தியிலும், நல்ல வரவேற்பை கிடைத்ததை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தின் இயக்குனர் கௌதம் மேனனுக்கு பைக் ஒன்றையும், நடிகர் சிம்புவுக்கு ஒரு கோடி மதிப்பிலான கார் ஒன்றையும் பரிசாக கொடுத்து அசத்தினார்.

ஆன்ட்டி ஆனாலும் கவர்ச்சி குறையாத மீரா ஜாஸ்மின்..! இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் தரமான ஹாட் போஸ்!

99

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ஓடிடி யில் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், விரைவில் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சிம்புவின் ரசிகர்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved