ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் அடித்த சூர்யா... பிரியாணி சமைத்து தடபுடலாக விருந்து வைத்த மம்முட்டி
காதல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் சூர்யாவுக்கு, பிரியாணி சமைத்து கொடுத்து அசத்தி உள்ளார் நடிகர் மம்முட்டி.
நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து விலகிய நடிகை ஜோதிகா, பின்னர் 35 வயதினிலே படம் மூலம் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் மலையாள படத்தில் நடிக்க கமிட் ஆனார்.
காதல் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஜோதிகா. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாகும். ஜோ பேபி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. கொச்சியில் தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... எம்.பி. ஆன பின் இசைஞானிக்கு மற்றுமொரு அங்கீகாரம்... இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி
இந்நிலையில், நடிகர் சூர்யா, காதல் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். அப்போது அவருக்கு விருந்து கொடுக்க முடிவு செய்த நடிகர் மம்முட்டி, உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பிரியாணியை தயார் செய்து அதனை சூர்யா - ஜோதிகா ஜோடிக்கு பரிமாறி உள்ளார். அதுகுறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன.
சூர்யா உடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்திருந்த மம்முட்டிக்கு நன்றி தெரிவித்த சூர்யா, உங்கள் நேரத்திற்கும், உங்களது பொன்னான வார்த்தைகளுக்கு நன்றி, நீங்கள் கவனித்த விதம் அற்புதமாக இருந்தது. நீங்கள் சமைத்து கொடுத்த உணவும் அருமையாக இருந்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார் சூர்யா.
இதையும் படியுங்கள்... ரசிகர்களே... ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க..! சிம்பு வைத்த வேண்டுகோளால் ஷாக் ஆன ரசிகர்கள்