ரசிகர்களே... ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க..! சிம்பு வைத்த வேண்டுகோளால் ஷாக் ஆன ரசிகர்கள்
சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்ற வெந்து தணிந்தது காடு படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவில் நடிகர் சிம்பு தனது ரசிகர்களிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை முன்வைத்தார்.
நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக ரிலீசான படம் வெந்து தணிந்தது காடு. ஐசரி கணேசன் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கிய இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இப்படத்தில் முத்து என்கிற கிராமத்து இளைஞராக நடித்திருந்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சிம்புவின் நடிப்பு எதார்த்தமாக இருந்ததாக பாராட்டுக்களும் கிடைத்தன.
வெந்து தணிந்தது காடு படம் ரிலீசான முதல் வாரத்திலேயே அப்படத்தின் சக்சஸ் மீட் கொண்டாடினர். அப்போது இயக்குனர் கவுதம் மேனனுக்கு ஒரு புல்லட் பைக்கும், சிம்புவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள சொகுசு காரும் பரிசாக அளித்து தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன்.
இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் 50-வது நாள் வெற்றி விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிம்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகை சித்தி இத்னானி, நடிகர் சரத்குமார், நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... VTK 50th Day Celebration: 'வெந்து தணிந்தது காடு' 50ஆவது நாள் வெற்றி விழாவை கொண்டாடிய படக்குழு! புகைப்படங்கள்!
இந்த விழாவில் பேசிய சிம்பு ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்தார். அதுகுறித்து அவர் பேசியதாவது : “படம் நடித்துக்கொண்டிருக்கும் போது நிறைய அப்டேட்டுகள் வேண்டும் என கேட்கிறீர்கள். நீங்கள் படத்தின் மீதான ஆர்வத்தில் அப்படி கேட்கிறீர்கள் என புரிகிறது. ஆனா, ஒரு தயாரிப்பாளரா இருக்கட்டும், டைரக்டரா இருக்கட்டும், ஹீரோவா இருக்கட்டும், தங்கள் படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு மிகவும் மெனெக்கட்டு வேலை செய்கிறோம்.
ஆனால் நீங்கள் தொடர்ந்து அப்டேட்டுகள் கேட்கும் போது, ஒரு தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுடைய வேலை. எங்களுக்கு அதற்கான இடம் கொடுத்தால் தான் நல்ல படங்கள் வரும். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவ தூக்கி மேல வைப்பாங்க. ஆனா, நான் என் ரசிகர்களை தூக்கி மேல வச்சிருக்கேன். என் படத்துக்கு மட்டுமில்ல, எல்லா படத்துக்குமே அப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. இந்த தகவலை என்னுடைய பத்து தல படத்தின் டைரக்டர் சொல்ல சொன்னார். அதனால் தான் சொன்னேன்” என சிம்பு கூறினார்.
இதையும் படியுங்கள்... விரைவில் ‘சிங்கம் 4’... ஹரி இயக்கத்தில் மீண்டும் போலீசாக அவதாரம் எடுக்க உள்ள சூர்யா..!