MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விரைவில் ‘சிங்கம் 4’... ஹரி இயக்கத்தில் மீண்டும் போலீசாக அவதாரம் எடுக்க உள்ள சூர்யா..!

விரைவில் ‘சிங்கம் 4’... ஹரி இயக்கத்தில் மீண்டும் போலீசாக அவதாரம் எடுக்க உள்ள சூர்யா..!

சிங்கம் படத்தின் 4-ம் பாகம் மூலம் சூர்யா - ஹரி கூட்டணி 5 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 Min read
Ganesh A
Published : Nov 10 2022, 08:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர்கள் என்றால் அது பாலாவும், ஹரியும் தான். இதில் ஹரி இயக்கத்தில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார் சூர்யா. அவர் இயக்கத்தில் ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் 3 பாகங்கள் என மொத்தம் 5 படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா. இந்த 5 படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்கள்.

24

அதிலும் குறிப்பாக சூர்யாவை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படம் என்றால் அது சிங்கம் தான். சூர்யா - ஹரி கூட்டணியில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் பட்டிதொட்டியெங்கும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து 2013-ம் ஆண்டு சிங்கம் படத்தின் 2-ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தைப்போல் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இப்படம் அந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனை படைத்தது.

இதையும் படியுங்கள்... ‘லவ் டுடே’ படக்காட்சியை விழிப்புணர்வுக்காக பயன்படுத்திய போலீஸ்... நெகிழ்ந்துபோன இயக்குனர் பிரதீப்

34

இதையடுத்து 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் கடந்த 2017-ம் ஆண்டு சிங்கம் படத்தின் 3-ம் பாகம் ரிலீசானது. இப்படத்தின் வெற்றிக்கு பின் அருவா படத்திற்காக சூர்யாவும், ஹரியும் இணைந்து பணியாற்ற உள்ளதாக கடந்த 2020-ம் ஆண்டு அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக அப்படத்தை கைவிட்டு விட்டனர்.

44

இந்நிலையில், சூர்யா - ஹரி கூட்டணி தற்போது 5 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஹரி தற்போது சிங்கம் படத்தின் 4-ம் பாகத்திற்கான கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளாராம். தற்போது கைவசம் உள்ள சிறுத்தை சிவா படம், வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் சுதா கொங்கரா படம் ஆகியவற்றை முடித்துவிட்டு சூர்யா சிங்கம் படத்தின் 4-ம் பாகத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பிக்பாஸ் வீட்டில் அடி தடி..! போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved