எம்.பி. ஆன பின் இசைஞானிக்கு மற்றுமொரு அங்கீகாரம்... இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார் பிரதமர் மோடி
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இசை ரசிகர்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷம் இளையராஜா. காலம் கடந்து கொண்டாடப்படும் வகையில் ஏராளமான பாடல்களைக் கொடுத்துள்ள இளையராஜா, இன்றளவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இவரது இசையில் தற்போது வெற்றிமாறனின் விடுதலை படம் தயாராகி வருகிறது.
இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் கடந்த ஜூலை மாதம் அவரை ராஜ்யசபாவில் நியமன எம்.பி.யாக நியமித்து பெருமைப்படுத்தியது மத்திய அரசு. அப்போது இதுகுறித்து விமர்சனங்களும் எழுந்தன. ஏனெனில், இளையராஜா அந்த சமயத்தில் மோடிய அம்பேத்கரோடு ஒப்பிட்டு பேசியதற்கு கிடைத்த பரிசு தான் இந்த எம்.பி. பதவி என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.
இதையும் படியுங்கள்... பிக்பாஸ் கேட்ட ஏடாகூடமான கேள்வியால் ஜனனி - ஏடிகே இடையே வெடித்த சண்டை... வைரல் புரோமோ இதோ
இது ஒருபுறம் இருக்க, தற்போது இளையராஜாவுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைக்க உள்ளது. அது என்னவென்றால் அவருக்கு நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாம். திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், பிரதமர் மோடி கையால் தான் இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை பெற உள்ளார் இளையராஜா. இந்த விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மோடியின் வருகையால் திண்டுக்கல் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... ரசிகர்களே... ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க..! சிம்பு வைத்த வேண்டுகோளால் ஷாக் ஆன ரசிகர்கள்