- Home
- Cinema
- Theatre and OTT Releases : நூறு சாமி முதல் எங்கள் தங்கம் வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ
Theatre and OTT Releases : நூறு சாமி முதல் எங்கள் தங்கம் வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ
This Week OTT and Theatre Releases : ஜூன் 15 முதல் 19ந் தேதி வரை தியேட்டர் மற்றும் ஓடிடியில் என்னென்ன படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

தியேட்டர் ரிலீஸ் படங்கள்
ஜூன் மாதம் 19-ந் தேதி தமிழில் சில படங்கள் ரிலீஸ் ஆகின்றது. அதில் முக்கியமான படம் நூறு சாமி. பிச்சைக்காரன் என்கிற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த விஜய் ஆண்டனி - சசி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் இது. இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுவாசிகா நடித்துள்ளார். இப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இதற்கு போட்டியாக வரும் மற்றொரு திரைப்படம் எங்கள் தங்கம். இப்படத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ளார். நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இப்படமும் ஜூன் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுதவிர விஜய் நடித்த ஜில்லா, மெர்சல் ஆகிய படங்களும் இந்த வாரம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன.
ஓடிடி ரிலீஸ் படங்கள்
Drishyam 3
மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த த்ரிஷ்யம் தொடரின் கடைசி பாகம் இது. மே 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த த்ரில்லர் படம், நல்ல வெற்றியைப் பெற்றது. இப்போது மலையாள மொழியில் ஓடிடி ரசிகர்களுக்காக வெளியாகிறது. இதனை ஜூன் 18ந் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
கெணத்த காணோம் (Kenatha Kanom)
தமிழ்நாட்டின் ஒரு கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கிராமிய காமெடி-எமோஷனல் கதை இது. யோகி பாபு, லவ்லின், ஜார்ஜ் மரியன், ரைச்சல் ரெபெக்கா பிலிப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம், இப்போது ஓடிடி-க்கு வருகிறது. இப்படம் ஜூன் 16ந் தேதி முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
Your Fault: London
இது ஒரு அடல்ட் ரொமான்டிக் த்ரில்லர் படம். நோவா, நிக் இருவரும் தீவிரமாகக் காதலிக்கிறார்கள். சில சம்பவங்களுக்குப் பிறகு, தாங்கள் மாற்றான் சகோதரன், சகோதரி என்பதை அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் தங்கள் காதலைக் கைவிட்டார்களா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இப்படம் ஜூன் 17ந் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஓடிடி ரிலீஸ் வெப் தொடர்கள்
Thukra Ke Mera Pyaar – Season 2
சமூக மற்றும் சாதி வேறுபாடுகளால் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள், பழிவாங்கும் உணர்வுக்கு வழிவகுக்கிறது. ஒரு காதல் கதை தோல்வியடைவதால் தொடங்கும் நிகழ்வுகள், அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. தவல் தாக்கூர், சஞ்சிதா பாசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை ஜூன் 19 முதல் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.
Save The Tigers 3
ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற தெலுங்கு காமெடி வெப் சீரிஸான 'சேவ் தி டைகர்ஸ்', மூன்றாவது சீசனுடன் மீண்டும் வருகிறது. திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளால் அவதிப்படும் மூன்று கணவர்களின் கலகலப்பான பயணம், இந்த புதிய சீசனிலும் தொடர்கிறது. இந்த வெப் சீரிஸ் ஜூன் 19 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
I Will Find You
தன் மகனைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஒரு தந்தைக்கு, தன் மகன் இன்னும் உயிருடன் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. உண்மையைக் கண்டறிய அவர் சிறையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். சாம் வொர்திங்டன், பிரிட் லோயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 18 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
Oasis
ஸ்பெயினில் உள்ள ஒரு ஆடம்பர ரிசார்ட்டில் வசிக்கும் பெரும் பணக்காரர்களின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் ஸ்பானிஷ் த்ரில்லர் சீரிஸ் இது. ஒரு நபர் காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணை தொடங்கும் போது, அனைவரின் திட்டங்களும் தலைகீழாக மாறுகின்றன. ஜூன் 19 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
Color Book
மனைவியின் மரணத்திற்குப் பிறகு, தனது 11 வயது மகனை வளர்க்கும் ஒரு தந்தையின் கதை இது. உணர்ச்சிகள் நிறைந்த இந்தப் படம், தந்தை-மகன் இடையேயான பாசப் பிணைப்பைக் காட்டுகிறது. ஜூன் 19 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
Husbands In Action
போதைப்பொருள் கும்பல் தலைவனைப் பிடித்த ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை, எதிர்பாராத திருப்பத்தைச் சந்திக்கிறது. அவரது முன்னாள் மனைவியைக் கடத்திவிடுவதால், அவளைக் காப்பாற்ற ஒரு ஆபத்தான மிஷனை அவர் மேற்கொள்கிறார். காங் மியுங், ஜின் சன்-கியூ, கிம் ஜி-சோக், யூன் கியுங்-ஹோ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 19 முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
Athiradi
கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்த காமெடி-எமோஷனல் படத்தில் டோவினோ தாமஸ், பசில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த மலையாளப் படம், இப்போது ஓடிடி ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகிவிட்டது. ஜூன் 19ந் தேதி சோனி லிவ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

