MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • ஒரு ரீசார்ஜில் 15 ஓடிடி, 1000 டிவி சேனல்கள்.. ரூ.200 போதும்.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு

ஒரு ரீசார்ஜில் 15 ஓடிடி, 1000 டிவி சேனல்கள்.. ரூ.200 போதும்.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ புதிய ரூ.200 ஓடிடி பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் 15 பிரீமியம் ஓடிடி ஆப்ஸ், 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், 30GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5G உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகின்றன.

1 Min read
Author : Raghupati R
Published : May 27 2026, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜியோ புதிய திட்டம்
Image Credit : Google

ஜியோ புதிய திட்டம்

டிஜிட்டல் பொழுதுபோக்கு சேவைகளின் பயன்பாடு இந்தியாவில் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ஓடிடி பாஸை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 200 ரூபாய் விலையில் அறிமுகமான இந்த திட்டம், பல்வேறு பிரீமியம் ஓடிடி சேவைகளை ஒரே ரீசார்ஜில் வழங்குவதால் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சினிமா, தொடர்கள் மற்றும் நேரடி விளையாட்டு போட்டிகளை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மலிவு ஓடிடி பிளான்
Image Credit : ANI

மலிவு ஓடிடி பிளான்

இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக 15 பிரபல ஓடிடி தளங்களுக்கான அணுகல் வழங்கப்பட்டுள்ளது. யூடியூப் பிரீமியம், ஜியோ ஹாஸ்டார், பிரைம் வீடியோ உள்ளிட்ட முக்கிய சேவைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் விளம்பரமில்லா வீடியோ பார்வை, பின்னணியில் இசை இயக்கம் மற்றும் மொபைல் சாதனங்களில் நேரடி ஸ்ட்ரீமிங் போன்ற வசதிகளை பயனர்கள் பெற முடியும்.

35
ஜியோ என்டர்டெயின்மென்ட் பாஸ்
Image Credit : Gemini

ஜியோ என்டர்டெயின்மென்ட் பாஸ்

மேலும், ஜியோ டிவி வழியாக 1000-க்கும் மேற்பட்ட நேரலை தொலைக்காட்சி சேனல்களும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு, திரைப்படம், விளையாட்டு மற்றும் பிராந்திய சேனல்கள் என பல்வேறு வகை சேனல்களை பயனர்கள் பார்க்கலாம். குறிப்பாக ஸ்டார், சோனி மற்றும் சன் குழும சேனல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

45
ஜியோ 200 திட்டம்
Image Credit : Google

ஜியோ 200 திட்டம்

இந்த திட்டத்தில் 30 ஜிபி அதிவேக டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதோடு, அடிப்படை ஜியோ திட்டம் செயல்பாட்டில் உள்ள பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி சேவையும் கிடைக்கும். இதனால் பொழுதுபோக்கும் இணைய பயன்பாடும் ஒரே திட்டத்தில் கிடைப்பது கூடுதல் பலனாக பார்க்கப்படுகிறது.

55
ஜியோ ஓடிடி பாஸ்
Image Credit : gemini

ஜியோ ஓடிடி பாஸ்

இந்த புதிய ஓடிடி பாஸை ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளம், மை ஜியோ செயலி மற்றும் ஜியோ விற்பனை மையங்கள் மூலம் வாங்கலாம். குறைந்த செலவில் அதிக சேவைகளை வழங்கும் இந்த திட்டம், ஓடிடி சந்தையில் புதிய போட்டியை உருவாக்கும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் கருதுகின்றன.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜியோ
ஓடிடி
ரிலையன்ஸ் ஜியோ
மறுஊட்டத் திட்டம்
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
BSNL Free Insurance: பிஎஸ்என்எல் பயனர்களுக்கு சூப்பர் சலுகை! இந்த 2 ரீசார்ஜ் திட்டங்களில் ரூ.1 லட்சம் இலவச காப்பீடு
Recommended image2
Samsung Galaxy A08: ரூ.18,499 தான் விலை... 6,000mAh பேட்டரி, 50MP கேமரா, 6 ஆண்டு அப்டேட் கொண்ட சாம்சங் போன்
Recommended image3
Recharge Packs: இனி ஒரே கிளிக்கில் தேவையான ரீசார்ஜ் பிளான்கள்! வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
Recharge Plan Under Rs 200: ரூ.200-க்குள் பெஸ்ட் ரீசார்ஜ் எது? ஜியோ vs ஏர்டெல் - எந்த பிளான் சிறந்தது தெரியுமா?
Recommended image2
BSNL : “ரூ.225-க்கு 75GB டேட்டா!”.. ஜியோ, ஏர்டெல் விலை உயர்வுக்கு பதிலடி கொடுத்த பிஎஸ்என்எல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved