MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!

"டாஸ்மாக் நேரத்தை நீட்டிச்சு, ஒயின் ஷாப்புகளை அதிகமாக்குங்கள்" - வினோத கோரிக்கை வைத்த பிரபல நடிகர்!

சமீபத்தில் நடைபெற்ற 'மக்கள் தலைவா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கஞ்சா கருப்பு பேசிய கருத்துகள், அங்கு கூடியிருந்தவர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. அவர் முன்வைத்த கோரிக்கைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 15 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
இசை வெளியீட்டு விழா
Image Credit : Chatgpt

இசை வெளியீட்டு விழா

'பழகிய நாட்கள்', 'மூன்றாம் மனிதன்' ஆகிய படங்களை இயக்கிய ராம்தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மக்கள் தலைவா'. ரவிமரியா, ராதாரவி, பேரரசு, நாஞ்சில் சம்பத் மற்றும் கஞ்சா கருப்பு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் கஞ்சா கருப்பு, படப்பிடிப்புத் தளத்தில் தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். "இயக்குநர் ராம்தேவ் ஒரு காட்சிக்காக அதிகாலை 3 மணிக்கு போன் செய்து, 'காலை 4 மணிக்கே டாஸ்மாக் பார் அருகில் இருக்க வேண்டும்' என்று கூறினார். அவர் சொன்னபடியே நான் அங்கு சென்றேன். ஆனால், கடை திறக்கப்படவில்லை. அங்கிருந்த ஊழியரிடம் மதுபானம் வாங்க அல்ல, நடிக்க வந்திருக்கிறேன் என்று கூறிச் சமாளித்தேன்," என அந்தச் சம்பவத்தை நகைச்சுவையாக விவரித்தார்.

இதையும் படிங்க : CM Vijay Divorce Case : முதல்வர் விஜய் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி! விவாகரத்து வழக்கில் நடந்தது என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
கஞ்சா கருப்பின் அதிரடி கோரிக்கைகள்
Image Credit : our own

கஞ்சா கருப்பின் அதிரடி கோரிக்கைகள்

தனது பேச்சின் இடையே தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகம் குறித்து அவர் சில காட்டமான கருத்துகளை முன்வைத்தார். தற்போது டாஸ்மாக் கடைகள் இரவு 9:45 மணிக்கே மூடப்படுவதால் மதுப்பிரியர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே, காலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், ஆங்காங்கே குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார்.

பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவது குறித்துப் பேசிய அவர், இது தொடர்பாக இயக்குநர் பேரரசு போன்றவர்கள் அரசிடம் விவாதிக்க வேண்டும் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பலரும் ஆலோசனைகளை வழங்கி வரும் சூழலில், ஒரு திரைப்பட விழாவில் நடிகர் ஒருவர் டாஸ்மாக் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Astrology : சொத்து, சுகம் தேடி வரும் அந்த 3 ராசிகள்! கோடீஸ்வர யோகத்தால் சொத்துகள் குவியும்!

Related Articles

Related image1
TASMAC New Order: டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி! இனி இவர்கள் பீர், குவாட்டர் வாங்க முடியாது! அதிர்ச்சியில் குடிமகன்கள்
Related image2
Now Playing
TASMAC | இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AM
Arun Mozhi Varman
சினிமா
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Theatre and OTT Releases : நூறு சாமி முதல் எங்கள் தங்கம் வரை... இந்த வார தியேட்டர் & OTT ரிலீஸ் லிஸ்ட் இதோ
Recommended image2
Rashmika : திருமணத்துக்கு பின் திடீரென பெயரை மாற்றிய நடிகை ராஷ்மிகா மந்தனா...!
Recommended image3
Ethirneechal : துப்பாக்கிச்சூட்டில் பலியானது யார்? தர்ஷினியை மீட்டாரா ஜனனி?
Related Stories
Recommended image1
TASMAC New Order: டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி! இனி இவர்கள் பீர், குவாட்டர் வாங்க முடியாது! அதிர்ச்சியில் குடிமகன்கள்
Recommended image2
Now Playing
TASMAC | இனி 'சைடு'ல காசு வாங்க முடியாது! டாஸ்மாக்கில் நடந்த அதிரடி மாற்றம்! குடிமகன்கள் குஷி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved