MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TASMAC New Order: டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி! இனி இவர்கள் பீர், குவாட்டர் வாங்க முடியாது! அதிர்ச்சியில் குடிமகன்கள்

TASMAC New Order: டாஸ்மாக்கில் அடுத்த அதிரடி! இனி இவர்கள் பீர், குவாட்டர் வாங்க முடியாது! அதிர்ச்சியில் குடிமகன்கள்

TASMAC News: டாஸ்மாக்கில் 4700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக சுமார் 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது.இதில், வரும் வருமானத்தை வைத்து தான் அரசு இயந்திரமே இயங்குகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 11 2026, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தினமும் 100 கோடிக்கு வருமானம்
Image Credit : Asianet News

தினமும் 100 கோடிக்கு வருமானம்

தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 4700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. தினமும் சுமார் 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் தீபாவளி மற்றும் பொங்கல், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் பல நூறு கோடிக்கு மது விற்பனையாகிறது. குறிப்பாக சொல்ல போனால் டாஸ்மாக்கில் வரும் வருமானத்தை வைத்து தான் அரசு இயந்திரமே இயங்குவதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தவெக ஆட்சியில் 717 கடைகளை மூடல்
Image Credit : our own

தவெக ஆட்சியில் 717 கடைகளை மூடல்

டாஸ்மாக் விற்பனையில் அரசு கோடி கோடியாக சம்பாதித்தாலும் இதனால் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்வங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரும் புறம் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் கைப்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை அடுத்து பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் மொத்தம் 717 கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Related Articles

Related image1
முதல்வர் விஜய் உத்தரவு போட்டும்! இன்னும் மூடப்படாத டாஸ்மாக் கடைகள்! இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை?
Related image2
Power shutdown: நாளை இருளில் மூழ்கப்போகும் தமிழகம்.. எந்தெந்த பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!
36
 டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
Image Credit : Asianet News

டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

அடுத்த அதிரடியாக 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்கக்கூடாது. அப்படி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடங்கள் இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டுமெனவும், அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கும் ஊரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

46
டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
Image Credit : our own

டாஸ்மாக் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்களின் தலைமையில், மாநிலம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான மற்றும் சமூகப் பொறுப்புணர்வு மிக்க சூழலை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. இந்த நோக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள். 1981-ன் கீழ் உரிமம் பெற்ற அனைத்து FL2 மற்றும் FL3 வளாகங்களிலும் பின்வரும் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும்.

56
21 வயதிற்குக் குறைவான நபர்களுக்கு மது விற்கக்கூடாது
Image Credit : Asianet News

21 வயதிற்குக் குறைவான நபர்களுக்கு மது விற்கக்கூடாது

21 வயதிற்குக் குறைவான எந்த நபருக்கும் மதுபானம் விற்கப்படவோ, வழங்கப்படவோ, விநியோகிக்கப்படவோ அல்லது பரிமாறப்படவோ கூடாது. ஒருவரின் வயது குறித்து சந்தேகம் இருப்பின், மதுபானம் வழங்குவதற்கு முன் அவரின் வயதிற்கான செல்லுபடியாகும் ஆவணச் சான்றுகள் சரிபார்க்கப்பட வேண்டும். அனைத்து FL2 உரிமம் பெற்ற கிளப்புகளும் தங்களது பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். நடைமுறையில் உள்ள விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் அவர்களது தகுதியுடைய விருந்தினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும்.

66
நடவடிக்கை எடுக்கப்படும்
Image Credit : Asianet News

நடவடிக்கை எடுக்கப்படும்

FL2 மற்றும் FL3 பார்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட செயல்பாட்டு நேரங்கள் எந்தவித விலகலும் இன்றி கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். FL2 உரிமம் பெற்ற கிளப்புகளில், பார் செயல்பாடு அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக மட்டுமே இருக்க வேண்டும். கிளப் நிர்வாகங்கள், கிளப் நிறுவப்பட்ட நோக்கங்களுக்கு ஏற்ப பிற பொழுதுபோக்கு, கலாச்சார, விளையாட்டு மற்றும் சமூகச் செயல்பாடுகள் தொடர்ந்து மற்றும் பயனுள்ளதாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

மேற்கண்ட அறிவுறுத்தல்களை அனைத்து உரிமதாரர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம், 1937, அதன் கீழ் இயற்றப்பட்ட விதிமுறைகள் அல்லது உரிம நிபந்தனைகள் ஆகியவற்றின் ஏதேனும் மீறல்கள் மிகவும் தீவிரமாகக் கருதப்பட்டு. சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு
டிவி.கே. விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
PMMVY Scheme: கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு ரூ.11,000 உதவித் தொகை.! விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள் என்ன? முழு விவரம் இதோ.!
Recommended image2
Now Playing
TVK VIJAY: புது முகங்களை களமிறக்கும் தளபதி விஜய்! த்ரிஷா, சவுக்கு சங்கர் போட்டியா?
Recommended image3
Uzhavar App Update: விவசாயிகளுக்கு குட்நியூஸ்! வேளாண் இயந்திரங்கள் எளிதில் வாடகைக்கு பெறலாம்! எப்படி தெரியுமா?1
Related Stories
Recommended image1
முதல்வர் விஜய் உத்தரவு போட்டும்! இன்னும் மூடப்படாத டாஸ்மாக் கடைகள்! இதுவரை மூடப்பட்ட மதுக்கடைகள் எத்தனை?
Recommended image2
Power shutdown: நாளை இருளில் மூழ்கப்போகும் தமிழகம்.. எந்தெந்த பகுதிகள்.. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved