தமிழ் சினிமாவில் தனது தனிப்பட்ட நடிப்பால் முத்திரை பதித்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. உச்ச நட்சத்திரங்களான ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்கள் நடித்துள்ளார். ஸ்ரீதேவிக்கே டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர். இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் கடந்த 1988ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நாகார்ஜுனா என்ற மகனும், சிநேகா என்ற மகளும் உள்ளனர். 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்ரீப்ரியா சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சினிமாவில் ஒரு கலக்கு கலக்கிய ஸ்ரீப்ரியா தற்போது நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். 

இதையும் படிங்க: ஊரடங்கிலும் ஓவர் கிளு கிளுப்பு... சட்டையை மட்டும் அணிந்து கொண்டு கிக்கேற்றிய கவர்ச்சி நடிகை...!

சென்னையில் பிறந்தாலும் லண்டனில் வக்கீலுக்கு படித்த சிநேகா அங்கேயே பணியாற்றி வருகிறார். மகள் மீது மீடியா வெளிச்சம் படாமல் பார்த்து வந்த ஸ்ரீப்ரியா, தனது மாலினி 22 பாளையங்கோட்டை பட பிரஸ் மீட்டின் போது முதன் முறையாக மகளை வெளியுலகிற்கு காட்டினார். 

இதையும் படிங்க: “கமலும், சோவும் சிரிச்சப்ப எங்க போனீங்க... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக வைரலாகும் வீடியோ...!

ஹீரோயின்களையே தோற்கடிக்கும் அளவிற்கு பார்க்க அவ்வளவு அழகாக இருக்கும் சிநேகாவை பலரும் சினிமாவில் நடிக்க வைக்க முயன்று வருகின்றனர். ஆனால் ஸ்ரீப்ரியா மகளோ பெரிய வழக்கறிஞராகி வலம் வருவதே தனது லட்சியம் என்று கூறிவிட்டாராம். அழகில் அம்மாவையே ஓரங்கட்டும் அளவிற்கு ஸ்லிம் லுக்கில் நச்சுன்னு இருக்கும் சிநேகாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.