MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijayakanth : கேப்டனின் நன்றிக்கடன்... விஜயகாந்த் ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் நடித்த படம் பற்றி தெரியுமா?

Vijayakanth : கேப்டனின் நன்றிக்கடன்... விஜயகாந்த் ஒரு ரூபா கூட சம்பளம் வாங்காமல் நடித்த படம் பற்றி தெரியுமா?

Vijayakanth Acted Without Salary : கேப்டன் விஜயகாந்த், சம்பளமே வாங்காமல் நடிகர் விஜய்க்காக ஒரு படத்தில் நடித்திருந்தாராம். அது எந்த படம் என்பதை இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 25 2026, 08:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சம்பளம் வாங்காமல் நடித்த விஜயகாந்த்
Image Credit : Facebook

சம்பளம் வாங்காமல் நடித்த விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், அரசியல்வாதியாகவும், மனிதநேயமிக்க மனிதராகவும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் மறைந்த நடிகர் விஜயகாந்த். 1979ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான அவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். மதுரையைச் சேர்ந்த விஜயகாந்த், சினிமா மீதான ஆர்வத்துடன் சென்னைக்கு வந்தபோது பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தாலும், பின்னர் அழுத்தமான கதைகளைத் தேர்வு செய்து ஹீரோவாக உயர்ந்தார். குறிப்பாக ‘சட்டம் ஒரு இருட்டறை’ போன்ற படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தன.

ரத்தம் வழிய வழிய நடித்த 'புரட்சி கலைஞர்'.. படப்பிடிப்பு தளத்தில் உறைந்து போன யூனிட்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அரசியலில் முத்திரை பதித்த விஜயகாந்த்
Image Credit : Facebook

அரசியலில் முத்திரை பதித்த விஜயகாந்த்

ஆக்ஷன் கதைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், குடும்ப உறவுகள் மற்றும் சென்டிமென்ட் கதைகளிலும் நடித்த விஜயகாந்த், அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றார். அவரது படங்களில் சமூக அக்கறை, நேர்மை, துணிச்சல் போன்ற அம்சங்களும் தொடர்ந்து இடம்பெற்றன. சினிமாவில் கிடைத்த புகழை அரசியலிலும் பயன்படுத்திய விஜயகாந்த், தேமுதிக கட்சியைத் தொடங்கி தமிழக அரசியலில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கினார். தனது கருத்துகளை வெளிப்படையாகவும் தயக்கமின்றியும் பேசும் குணம் கொண்டிருந்த அவர், அரசியலிலும் தனது தனித்துவமான அணுகுமுறையால் கவனம் பெற்றார்.

Related Articles

Related image1
Vijayakanth: ஃபீல் குட் சாங்.! ரசிகர்கள் கொண்டாடிய "நீ பொட்டு வச்ச தங்கக்குடம்".! துள்ளி குதிக்க வைத்த இளையராஜா.!
Related image2
Vijayakanth Movies: விஜயகாந்துக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட நடிகர்! அடுத்தடுத்து 5 சூப்பர் டூப்பர் ஹிட்!
34
கருப்பு எம்ஜிஆர்
Image Credit : Asianet News

கருப்பு எம்ஜிஆர்

தன்னுடைய அலுவலகத்துக்கு வரும் அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு உணவு பரிமாறி ஏழைகளின் பசியாற்றினார் விஜயகாந்த். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் போலவே இவரும் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளதால் அவருக்கு ‘கருப்பு எம்ஜிஆர்’ என்ற அடைமொழியும் கிடைத்தது. ரசிகர்கள் அவரை ‘புரட்சிக் கலைஞர்’, ‘கேப்டன்’ உள்ளிட்ட பெயர்களால் அன்புடன் அழைத்தனர்.

44
விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடித்த விஜயகாந்த்
Image Credit : x

விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடித்த விஜயகாந்த்

விஜயகாந்தின் திரைப்பயணத்தில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருடன் இருந்த நட்பும் யாராலும் மறக்க முடியாதது. எஸ்.ஏ.சி இயக்கிய திரைப்படங்கள் மூலம் விஜயகாந்த் பல வெற்றிகளைப் பெற்றிருந்தார். 1993ஆம் ஆண்டு, தனது மகன் விஜய்யை ஹீரோவாக வைத்து ‘செந்தூரப்பாண்டி’ திரைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். விஜய்யின் சினிமா வளர்ச்சிக்கு இந்தப் படம் முக்கியமானதாக அமைந்தது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த், தனது வெற்றிப் பயணத்தில் பங்காற்றிய இயக்குநரின் மகனான விஜய்க்கு ஆதரவாக நின்றார்.

குறிப்பாக, அந்தப் படத்தில் விஜயகாந்த் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் பின்னர் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இது விஜயகாந்தின் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் முக்கியமான சம்பவமாக பார்க்கப்படுகிறது.

திரையில் ஹீரோவாகவும், அரசியலில் தலைவராகவும், வாழ்க்கையில் மனிதநேயமிக்க மனிதராகவும் விஜயகாந்த் விட்டுச் சென்ற தடம், அவரது மறைவுக்குப் பிறகும் ரசிகர்களின் நினைவுகளில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரஜினியுடன் மோதும் அஜித்; ஹாட்ரிக் ஹிட் அடிப்பாரா சூர்யா? அடுத்த 4 மாதத்தில் இத்தனை பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
நாட்டையே நடுநடுங்க வைத்த நிஜ சீரியல் கில்லரின் கதை... OTT-யில் டிரெண்டாகும் சைக்கோ த்ரில்லர் படம்
Recommended image3
Bigg Boss Common Man : பிக் பாஸ் காமன்மேன் நிகழ்ச்சியில் முனியம்மாவுக்கு செக் வைத்த டீம்! ஷாப்பிங் டாஸ்க்கில் வெடித்த சர்ச்சை
Related Stories
Recommended image1
Vijayakanth: ஃபீல் குட் சாங்.! ரசிகர்கள் கொண்டாடிய "நீ பொட்டு வச்ச தங்கக்குடம்".! துள்ளி குதிக்க வைத்த இளையராஜா.!
Recommended image2
Vijayakanth Movies: விஜயகாந்துக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட நடிகர்! அடுத்தடுத்து 5 சூப்பர் டூப்பர் ஹிட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved