- Home
- Gallery
- Vijayakanth Movies: விஜயகாந்துக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட நடிகர்! அடுத்தடுத்து 5 சூப்பர் டூப்பர் ஹிட்!
Vijayakanth Movies: விஜயகாந்துக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்ட நடிகர்! அடுத்தடுத்து 5 சூப்பர் டூப்பர் ஹிட்!
மறைந்த நடிகர் விஜயகாந்தை வைத்து அடுத்தடுத்து 5 சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய நடிகர் மற்றும் இயக்குனர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Captain Vijayakanth
நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 28-ஆம் தேதி காலை 6:10 மணியளவில் உயிரிழந்தார். இவரது மரணம் தமிழக மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த 8 வருடங்களாக, உடல்நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த் கட்சி பணிகளில் இருந்து விலகி இருந்த போதிலும், அவருக்கு அஞ்சலி செலுத்த சென்னை மற்றும் வெளியூரை சேர்ந்த பலர், நேரடியாக வந்தனர். மேலும் மக்கள் எந்த அளவுக்கு விஜயகாந்த் மீது அன்பு வைத்திருந்தார்கள் என்பதையும் கண் எதிரே பார்க்க முடிந்தது.
மேலும் சமூக வலைத்தளங்களிலும் விஜயகாந்த் பற்றிய பல தகவல்கள் வெளியாகின. அந்த வகையில் பலருக்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்துக்கு, ஆரம்ப காலத்தில்... 5 ஹிட் படங்களை கொடுத்து விஜயகாந்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் என்பது உங்களுக்கு தெரியுமா?
1982-ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர். சுந்தர்ராஜன், 1984-ஆம் ஆண்டு விஜயகாந்தை வைத்து இயக்கிய திரைப்படம் 'வைதேகி காத்திருந்தாள்'. இந்த படம் சுமார் 100-நாட்களுக்கு மேல் ஓடி ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக 1986-ஆம் ஆண்டு மீண்டும் விஜயகாந்தை ஹீரோவாக வைத்து 'அம்மன் கோவில் கிழக்காலே' படத்தை இயக்கினார். இந்த படமும் கேப்டனின் ஹிட் லிஸ்டில் இணைந்தது.
இதனைத் தொடர்ந்து தழுவாத கைகள், என்கிட்ட மோதாதே, என் ஆசை மச்சான் போன்ற படங்களை இயக்கி அடுத்தடுத்து ஹிட் கொடுத்தார். விஜயகாந்தின் ஆரம்ப காலங்களில் எடுக்கப்பட்ட இந்த படங்கள் விஜயகாந்தை முன்னணி நடிகராக உயர்த்தியது. பின்னர் காந்தி பிறந்த மண், காலையும் நீயே மாலையும் நீயே போன்ற படங்களை படங்களில் மீண்டும் விஜயகாந்தை வைத்து சுந்தர் ராஜன் இயக்கிய போதும் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
ஆர்.சுந்தர் ராஜன் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து, அடுத்தடுத்து படங்களை இயக்க காரணம் அவரின் பெரிய மனசு தான் என கூறப்படுகிறது. ஆர்.சுந்தராஜன் ஒரு கட்டத்தில் இளம் இயக்குனர்களுக்கு வழிவிட்டு, திரைப்படங்கள் இயக்குவதில் இருந்து வெளியேறி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும், சீரியல்களுக்கு நடித்து வருகிறார். விஜயகாந்த் அதிகம் மதிக்கும் மனிதர்களில் மிக முக்கியமானவர் சுந்தர்ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் டிவி சூப்பர் ஹிட் தொடரில் இருந்து விலகும் ஹீரோயின்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!