Toxic Twitter Review: டாக்ஸிக் ட்விட்டர் விமர்சனம்: படம் எப்படி இருக்கு?
Toxic Twitter Review: யாஷ் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ‘டாக்ஸிக்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.டாக்ஸிக் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.

டாக்ஸிக் ட்விட்டர் விமர்சனம்
உலகமெங்கும் இன்று திரையரங்குகளில் யாஷ் நடித்துள்ள டாக்ஸிக் வெளியாகியுள்ள நிலையில், ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, டாக்ஸிக் திரைப்படம் தொடங்கியதிலிருந்து யாஷின் திரைத் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. முதல் பாதியில் முக்கிய கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. யாஷின் மாஸ் எண்ட்ரி காட்சிகள் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தின. குறிப்பாக அவரது ஸ்டைலான தோற்றம் மற்றும் திரை இருப்பு படத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக இருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
ஆக்ஷன் காட்சிகள் எப்படி?
படத்தின் முதல் பாதியில் இடம்பெறும் அதிரடி காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக வரும் பின்னணி இசையும் படத்தின் பிரம்மாண்டமான உணர்வை. வண்ணமயமான பாடல் காட்சிகளும் படத்தின் மற்றொரு கவனத்தை ஈர்க்கும் அம்சமாக உள்ளன. இதனால் மாஸ் ஆக்ஷன் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு திரையரங்கு அனுபவம் சுவாரஸ்யமாக இருக்கலாம். என்று கூறுகின்றனர்.
முதல் பாதியின் வேகம்
டாக்ஸிக் திரைப்படத்தின் நீளம் மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக இருப்பதால், குறிப்பாக முதல் பாதியில் கதை சற்று மெதுவாக நகர்வதாக சில ரசிகர்கள் கருதுகின்றனர். கதாபாத்திரங்களை விரிவாக அறிமுகப்படுத்துவதற்கும், பின்னணியை சொல்வதற்கும் நேரம் எடுத்துக்கொள்வதாக தெரிகிறது. இருப்பினும், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களின் அறிமுகம் காரணமாக படம் தொடர்ந்து பார்வையாளர்களின் கவனத்தை தக்கவைக்க முயற்சிக்கிறது.
யாஷ் மற்றும் கியாரா கெமிஸ்ட்ரி
படத்தில் யாஷ் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் காணப்படுகிறார். ஆக்ஷன் மட்டுமின்றி கிளாமர் அம்சங்களும் படத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளன. இந்த படத்தில் நடித்துள்ள ஐந்து நடிகைகள் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதையில் பங்களிப்பை வழங்குவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக யாஷ் மற்றும் கியாரா இடையேயான கெமிஸ்ட்ரி திரையரங்கில் நன்றாக வேலை செய்திருப்பதாக ரசிகர்களின் விமர்சனங்களில் இருந்து தெரிய வருகிறது.
இரண்டாம் பாதியில் வேகம்
இடைவேளைக்குப் பிறகு கதை புதிய வேகத்தை எடுப்பதாக படத்தைப் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கதையின் அடுத்தடுத்த திருப்பங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. ஒட்டுமொத்தமாக, யாஷின் ஸ்டைலான நடிப்பு, மாஸ் எண்ட்ரி, ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கியாராவுடனான கெமிஸ்ட்ரி ஆகியவை டாக்ஸிக் படத்தின் படத்தின் பாசிட்டிவ் அம்சங்களாக உள்ளது என்று கூறுகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

