நடிகர் விஜய் சேதுபதி மீது சர்ச்சைகள் எழுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்னதாக சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பு வெளியான போது மாதவிடாய் குறித்தும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஆதரவாக விஜய் சேதுபதி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து ஆன்லைன் பலசரக்கு வியாபாரம் குறித்த செயலி விளம்பரத்தில் விஜய் சேதுபதி நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விவசாயிகள், சிறு வியாபாரிகள், வணிகர்கள் ஆகியோர் விஜர் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்தடுத்து பிரச்சனைகளால் விஜய் சேதுபதி சூழப்பட்ட போதும், அவரது ரசிகர்கள் தான் ஆதரவாக இருந்தனர். 

சமீபத்தில் இந்து கடவுள்களை விஜய் சேதுபதி அவமதித்ததாக வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி 2019ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் நடத்திய 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் இந்துக்கள் வழிபடும் கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியுள்ளார். ’’கோவில்களில் சாமி சிலைகளை அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் பார்க்கலாம். அபிஷேகம் செய்து முடிந்த பின் திரை மூலம் சாமி சிலை மூடப்படும். சிலை மூடப்படும் போது அந்த கோவிலில் இருந்த ஒரு சிறுமி அவள் என் தாத்தாவிடம் ‘எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். 

இதையும் படிங்க: “நண்பன் விஜய்க்கு நன்றி”... ராகவா லாரன்ஸின் கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்த்த தளபதி...!

துணி மாற்றும்போது மூடப்படுகிறது?’’ என்று சந்தேக கேள்வி கேட்பதாகவும், அதற்கு தாத்தா ’’சாமி குளிக்கும்போது காட்ட்டுவார்கள். உடை மாற்றும்போது மூடப்படும்’’என்று கூறுகிறார். அதற்கு அந்த சிறுமி , ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என பேசியுள்ளார். 

இதையும் படிங்க: “கடவுள் உடை மாற்றுவதை காட்டுங்க”... சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சைபர் கிரைமில் புகார்...!

அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது அவருடைய ஒரிஜினல் கருத்து கிடையாது. மறைந்த கதாசிரியரும், நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் நிகழ்ச்சியில் பேசிய கைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார். ஆனால் விஜய் சேதுபதி இந்து மக்களின் மனம் புண்படும் படி நடந்து கொண்டதாகவும், இந்து மதத்தையும், இந்து கோயில்களின் ஆகம விதிமுறைகளையும் கொச்சைப்படுத்தியதாக கூறி இந்து மகா சபை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சோசியல் மீடியாவிலும் விஜய் சேதுபதியின் சர்ச்சை பேச்சிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள அவரது ரசிகர்கள் #WeSupportVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அத்துடன் விஜய் சேதுபதி வீடியோவின் ஒரிஜினல் வெர்ஷனான கிரேசி மோகன் வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர். 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

அந்த வீடியோவில், சிறுமி தனது தாத்தாவிடம் இப்போது என்ன நடக்கிறது என்று கேட்க இப்ப டிரஸ் பண்றாங்க என சொல்ல, என்ன தாத்தா குளிக்கிறத பார்க்க விடுறாங்க, டிரஸ் பண்றத பார்க்க விடமாட்டேங்கிறாங்களே என கேள்வி எழுப்புவதாக கிரேசி மோகன் சொல்ல, உலக நாயகன் கமல் ஹாசனும், துக்ளக் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான சோவும் விழுந்து, விழுந்து சிரிக்கின்றனர். இந்த வீடியோவை வைரலாக்கி வரும் விஜய் சேதுபதி ரசிகர்கள் கிரேசி மோகன் காமெடியை கேட்டு கமலும், சோவும் சிரிக்கும் போது எங்கே போனீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.